பிஹாரில் வாக்கு திருட்டு நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு

பாட்னா: பிஹாரில் வாக்கு திருட்டு நடை​பெறுகிறது என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி மீண்டும் குற்​றம் சாட்டி உள்ளார். வரும் நவம்​பரில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதையொட்டி அந்த மாநிலத்​தில் அண்​மை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொள்​ளப்​பட்டு கடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 65 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டுள்​ளன.

இந்த சூழலில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணியை எதிர்த்து மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பிஹார் முழு​வதும் 16 நாட்​கள் பேரணி நடத்தி வரு​கிறார். அவர் நேற்று பிஹாரின் அரரி​யா, புர்​னியா பகு​தி​யில் பேரணி நடத்​தி​னார். அப்​போது ராகுல் தலை​மை​யில் மோட்​டார் சைக்​கிள் பேரணி நடை​பெற்​றது.

அரரி​யா​வில் ராகுல் காந்தி பேசி​ய​தாவது: ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்று அரசி​யலமைப்பு சட்​டம் கூறுகிறது. ஆனால் ஏழைகளின் வாக்​கு​கள் பறிக்​கப்​பட்டு வரு​கின்​றன. பிஹாரில் நடை​பெற்ற வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி​யில் லட்​சக்​கணக்​கான ஏழைகளின் பெயர்​கள் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்டு உள்​ளது. உயிரோடு இருப்​பவர்​கள், உயி​ரிழந்து விட்​ட​தாக தேர்​தல் ஆணை​யம் கூறுகிறது. ஏழைகள், பிற்​படுத்​தப்​பட்ட மக்​களின் வாக்​குரிமை பறிக்​கப்​பட்டு உள்​ளது.

ஆளும் பாஜக​வுக்கு ஆதர​வாக மட்​டுமே தேர்​தல் ஆணை​யம் செயல்​படு​கிறது. வாக்​காளர் சிறப்பு திருத்​தப் பணி​யின் மூலம் பிஹாரில் வாக்கு திருட்டு நடை​பெற்று இருக்​கிறது. வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு​கள் நடை​பெற்று இருப்​ப​தாக அனைத்து கட்​சிகளும் குற்​றம் சாட்டி வரு​கின்​றன. ஆனால் பாஜக மட்​டும் மவுனம் காத்து வரு​கிறது. பாஜக​வுக்​கும் தேர்​தல் ஆணை​யத்​துக்​கும் இடையே ரகசிய கூட்​டணி நீடிக்​கிறது.

மகா​ராஷ்டி​ரா, ஹரி​யா​னா, கர்​நாட​கா​வின் வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு​கள் நடை​பெற்​றன. தற்​போது பிஹாரிலும் முறை​கேடு​கள் நடை​பெற்று உள்​ளன. இதை அனு​ம​திக்க மாட்​டோம். பிரதமர் நரேந்​திர மோடி வாக்கு திருட்​டில் ஈடு​படு​கிறார். இவ்​வாறு ராகுல் காந்தி தெரி​வித்​தார்.

மத்​திய அமைச்​சர் சிராக் பாஸ்​வான், ராகுல் காந்​தி​யின் பேரணியை கடுமை​யாக விமர்​சித்து வரு​கிறார். இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலை​வர் தேஜஸ்வி யாத​விடம் நிருபர்​கள் கேள்வி எழுப்​பி​னர்.

அவர் கூறும்​போது, ‘‘அமைச்​சர் சிராக் குறித்து எது​வும் கூற விரும்​ப​வில்​லை. அவர் எனக்கு மூத்த அண்​ணன் போன்​றவர். அவர் இது​வரை திரு​மணம் செய்து கொள்​ள​வில்​லை. விரை​வில் அவர் திரு​மணம் செய்து கொள்ள அறி​வுறுத்​துகிறேன்’’ என்​றார். அப்​போது குறுக்​கிட்ட ராகுல் காந்​தி, “இந்​த அறி​வுரை எனக்​கும்​ பொருந்​தும்​’’ என்​று தெரிவித்​தார்​.

முத்தம் கொடுத்தவருக்கு அறை: பிஹாரின் புர்னியா பகுதியில், ராகுல், தேஜஸ்வி யாதவ் தலைமையில் நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. ஏராளமான தொண்டர்கள் புடைசூழ ராகுல் முன்வரிசையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். கூட்ட நெரிசல் காரணமாக மோட்டார் சைக்கிளை அவர் மெதுவாக ஓட்டினார். அப்போது இளைஞர் ஒருவர் திடீரென கூட்டத்தில் புகுந்து ராகுலின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அந்த இளைஞருக்கு, ராகுல் காந்தியின் பாதுகாவலர் ஓங்கி ஓர் அறை விட்டார். அவரை பாதுகாவலர்கள் விரட்டிச் சென்றனர். இதை பார்த்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.