Orange Shark: ஆழ் கடலின் வண்ண அதிசயம்… விஞ்ஞானிகளுக்கே வியப்பூட்டிய ஆரஞ்சு சுறா!

கடலின் ஆழங்களில் மறைந்து இருக்கும் ரகசியங்கள் சில நேரங்களில் நம்மை மூச்சுத்திணறச் செய்யும் அளவுக்கு ஆச்சர்யப்படுத்தும். “சுறா என்றாலே பயம்!” – அப்படித்தான் பலர் நினைப்பார்கள். ஆனால், இந்த முறை ஒரு சுறா அனைவரையும் கவர்ந்தது அதன் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தால்!

கடந்த ஆண்டு, பரிசிமா டொமஸ் டெய் என்ற சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்த மீன்பிடிப் பயணத்தில், மீனவர்கள் 37 மீட்டர் ஆழத்தில், 31.2 டிகிரி வெப்பநிலையில் இருந்தபோது, இந்த அபூர்வமான சுறாவைக் கண்டுபிடித்து படம் பிடித்தனர். அப்போது அவர்களின் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகளவில் பேசுபொருளாக உள்ளது.

கோஸ்டா ரிகா கடற்கரை அருகே கண்டுபிடிக்கப்பட்ட இந்த அரிய சுறா, கடல் உயிரியல் உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சாதாரணமாக சுறாக்கள் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும் நிலையில், இந்த சுறாவின் உடல் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் பிரகாசித்தது.

Rare Orange Shark

இந்த வித்தியாசமான நிறத்திற்குக் காரணம் ஜான்திசம் எனப்படும் அரிதான மரபணு நிலை. இது சுறாவின் இயல்பான கறுப்பு நிறத்தைக் குறைத்து, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களை வெளிப்படுத்தச் செய்கிறது. சில ஆய்வாளர்கள் இதனுடன் அல்வினிசம் எனப்படும் நிலையும் சேர்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர், ஏனெனில் சுறாவின் கண்கள் வெள்ளையாக இருந்தன.

சாதாரணமாக இத்தகைய மரபணு மாற்றம் கொண்ட உயிரினங்கள் வேட்டையாடிகளால் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு உயிரிழக்க வாய்ப்பு அதிகம். ஆனால் இந்த சுறா வளர்ந்த பருவம் வரை உயிர் வாழ்ந்திருப்பது, இயற்கையின் வியப்பூட்டும் சான்றாகும். இது விஞ்ஞானிகளுக்கு புதிதான ஆராய்ச்சி பாதைகளைத் திறந்துள்ளது.

Rare Orange Shark

இந்த கண்டுபிடிப்பு தனிப்பட்ட சம்பவமா? அல்லது கடலில் மரபணு மாற்றங்களின் ஒரு புதிய பருவத்தின் தொடக்கமா? இன்னும் தெளிவான பதில் இல்லை. ஆனால் ஒரு விஷயம் உறுதி – இயற்கையின் புதிர்கள் இன்னும் முடிவடையவில்லை, அவை நம்மை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.