நியூயார்க்,
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து கொண்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் குடெர்மெடோவா உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சபலென்கா 7-6 மற்றும் 6-2 என்ற என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இவர் 3-வது சுற்றில் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோத உள்ளார்.
Related Tags :