சென்னை; எங்க ஊரு சொர்க்க பூமிங்க”….இந்தத் தண்ணீர்ல குளிச்சுப் பாருங்க…! என சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கான கூமாபட்டி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ரூ.10கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான் இயற்கை கொஞ்சும் இடத்தில், இந்த கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த இடமானது, பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணையுடன் மலையடிவாரத்தில் இந்தக் கிராமம் அமைந்திருப்பதால், கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சிகளைக் கொண்டுள்ளது. […]
