ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: சுப்மன் கில் தொடர்ந்து நம்பர் 1.. ஆஸி.வீரர்கள் முன்னேற்றம்

துபாய்,

ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி சமீபத்தில் முடிவடைந்தது. இதில் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதன் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2-வது இடத்திலும், பாபர் அசாம் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் தொடருகின்றனர். மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 8-வது இடத்தில் உள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 142 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். இதே ஆட்டத்தில் 47 பந்தில் சதம் விளாசிய கேமரூன் கிரீன் 40 இடங்கள் எகிறி 78-வது இடத்தை பெற்றுள்ளார். மிட்செல் மார்ஷ் 48-ல் இருந்து 44-வது இடத்துக்கு வந்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளின் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் சுழற்பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்காவின் கேஷவ் மகராஜ், இலங்கையின் தீக்‌ஷனா இருவரும் தலா 671 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3-வது இடத்திலும், ஜடேஜா 9-வது இடத்திலும் தொடருகின்றனர்.

ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. அஸ்மத்துல்லா உமர்சாய் முதலிடத்தில் தொடருகிறார். இந்தியா ஆல் ரவுண்டர் ஜடேஜா 9-வது இடத்தில் உள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.