தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் நேற்று (ஆகஸ்ட் 27, 2025) தங்களது 13வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினார். 2011 மே 16ல் நிச்சயதார்த்தம் நடைபெற்று, அதே ஆண்டு ஆகஸ்ட் 27ல் திருமணம் நடைபெற்றது.
சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் இருக்கும் அழகான புகைப்படத் தொகுப்பு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் தனது மனைவிக்கு, “பதினைந்து ஆண்டுகள் நிறைவுற்ற இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள் ஆர்த்தி” என வாழ்த்துகளையும் பகிர்ந்திருக்கிறார்.
இந்தத் தம்பதிக்கு ஆராதனா, குகன், பவன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். சிறுவயது நண்பர்களாக ஆரம்பித்து, வாழ்க்கைத் துணைவர்களாக மாறிய இவர்களின் பயணம் சுவாரஸ்யமானது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…