சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வரவிருப்பதற்கான விவாதங்கள் தற்போது பரபரப்பாக உள்ளன. இதிலும் முக்கியமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும்போது சிஎஸ்கே அணிக்காக விளையாட சஞ்சு சாம்சனை கோரியதாகவும், அதற்கு பதில் ராஜஸ்தான் அணி தனது சில வீரர்களை (சிவம்துபே அல்லது பதிராணா) கேட்டிருந்தது என தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு சிஎஸ்கே அணி ஒப்புக்கொள்ளவில்லை.
Add Zee News as a Preferred Source
இதிலிருந்து சிஎஸ்கே அணியும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும் இடையே பேச்சுவார்த்தை தீவிரமாக தொடங்கி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்தவர்கள் தற்போது சிஎஸ்கே அணியின் வீரர் கலீல் அகமதுக்கு ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. இது தற்போது ஐபிஎல் வட்டாரத்தில் சூடு பிடித்துள்ளது.
கலீல் அகமது கடந்த IPL சீசனில் 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக பவர்பிளேவில் அசத்தலாக பந்து வீசினார். இதனால் மும்பை அணி அவரை தங்கள் அணிக்கு இணைப்பு செய்வதற்கு ஆர்வம் காட்டி உள்ளது. அதற்கு பதிலாக, மும்பை அணி தீபக் சாகரை சிஎஸ்கே அணிக்கு அனுப்புள்ளதாக கூறப்படுகிறது. தீபக் சாகர் பெரும்பாலான போட்டி சிஎஸ்கே அணிக்காகவே விளையாடி இருக்கிறார்.
எனினும் நடந்து முடிந்த சீசனில் தீபக் சாகர் 14 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் அவரது வயது 33 ஆகிறது அதே நேரத்தில் கலீல் அகமதுக்கு 27 வயது மட்டுமே ஆகிறது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கலீல் அகமதை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த கோரிக்கையை ஏற்குமா? அப்படி இல்லை என்றால் என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
ஏற்கனவே சிஎஸ்கே அணியின் விளையாடிய தீபக் சாகரை எடுக்க விரும்புமா? அல்லது இளம் வீரர் கலீல் அகமதையே வைத்து அடுத்த சீசனை தொடரலாமா என்ற ஆலோசனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஈடுபட்டு வருகிறது. தீபக் சாகர் சிஎஸ்கே அணியில் முக்கிய வீரராக இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் பல போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனாலேயே மெகா ஏலத்தில் தீபக் சாகரை சென்னை அணி விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கலீல் அகமது சிறப்பாகவே கடந்த சீசனில் விளையாடிய நிலையில், அவரை வைத்தே அடுத்த சீசனை தொடர வேண்டும். அதுவே புத்திசாலித்தனமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
About the Author
R Balaji