சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் லண்டன் ஜெர்மனி பயண விவரங்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் 10 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள, 5ஆம் முறையாக வெளிநாடு செல்கிறார். இந்த முறை லண்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு 10 நாட்கள் செல்ல உள்ளார். வரும் 30ஆம் தேதி (ஆகஸ்டு 30) சென்னையில் இருந்து கிளம்பும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 8ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலீடுகளை […]
