கொல்லம்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக இருந்தவர் உதயகுமார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக வந்த ஒரு இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த இளம்பெண் கொல்லம் மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்தார். அந்த புகார் கேரள ஐகோர்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புகார் மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டு, குடும்ப நல நீதிபதி உதயகுமாரை கொல்லம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டது.
மேலும் இதுதொடர்பாக ஐகோர்ட்டு பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கையாக தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி அடங்கிய நீதிபதிகள் குழுவினர் குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி உதயகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.