இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. கடந்த 2 சீசன்களாக வெற்றி பெறவில்லை என்றாலும், இதுவரை 5 முறை கோப்பை வென்றுள்ளனர். இந்நிலையில் 2025ம் ஆண்டு சீசனில் சென்னை அணி வீரர்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை விட, 10 ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு மடங்கு அதிகமான சம்பளம் பெறுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் விவாதத்தையும் தூண்டியுள்ளது.
Add Zee News as a Preferred Source
சம்பள விவரங்கள்
ஐபிஎல் 2025 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில், தனது முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதே சமயம், அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனி ரூ.4 கோடி சம்பளத்தில் அன்கேப்ட் வீரராக அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார். இந்த விவரங்களின்படி, தோனியின் சம்பளத்தை விட அஸ்வினின் சம்பளம் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது, இது சென்னை அணியின் சம்பள கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய மாற்றத்தை குறிக்கிறது.
புதிய சம்பள கட்டமைப்பு
சென்னை அணியில் அதிகபட்ச சம்பளம் பெறும் வீரர்கள் பட்டியலில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ரூ.18 கோடியுடன் முதலிடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக மதீஷ பத்திரனா ரூ.13 கோடி மற்றும் சிவம் துபே ரூ.12 கோடி ஆகியோர் உள்ளனர். இந்த பட்டியலில் அஸ்வின் ரூ.9.75 கோடியுடன் ஆறாவது இடத்திலும், எம்.எஸ். தோனி ரூ.4 கோடியுடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர். இது, அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் மற்றும் தற்போதைய ஃபார்மில் உள்ள வீரர்களுக்கு நிர்வாகம் அதிக முக்கியத்துவம் அளிப்பதை காட்டுகிறது.
எம்.எஸ். தோனி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருப்பதால், ஒரு வீரராக மட்டுமின்றி, ஒரு ஆலோசகராகவும் அணியில் செயல்படுகிறார். எனவே, அணியின் நிதி சமநிலையை வலுப்படுத்தவும், மற்ற வீரர்களுக்கு அதிக தொகையை செலவிட வழிவகுக்கவும் அவர் தனது சம்பளத்தை குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது. மறுபுறம், ரவிச்சந்திரன் அஸ்வின் பல அணிகளில் விளையாடி அனுபவத்தை பெற்ற பிறகு, மீண்டும் தனது தாய் அணிக்கு திரும்பியுள்ளார். ஐபிஎல் தொடரில் இருந்து இந்த சீசனுக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ள நிலையில், அவரது இந்த மறுபிரவேசம் முக்கியத்துவம் பெறுகிறது.
About the Author
RK Spark