Lalit Modi : ஐபிஎல் நிதி முறைகேடு புகாரில் சிக்கி வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் முன்னாள் சேர்மன் லலித் மோடி, அண்மைக்காலமாக இந்திய பிளேயர்கள் குறித்த பல தகவல்களை வெளியிட்டு வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹர்பஜன் சிங் – ஸ்ரீ சாந்த் இடையே நடந்த சண்டை காணொளியின் இன்னொரு பகுதியை வெளியிட்ட அவர், இப்போது யுவராஜ் சிங்கிற்கு போர்ஷே கார் ஒன்றை பரிசாக கொடுத்ததை வெளிப்படையாக கூறியுள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உடனான கலந்துரையாடலின்போது லலித் மோடி இந்த தகவலை தெரிவித்தார்.
Add Zee News as a Preferred Source
அந்த பாட்காஸ்டில் லலித் மோடி பேசும்போது, 2007 டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி செல்வதற்கு முன்பு, பிளேயர்களிடம் தான் பேசியதாக லலித் மோடி கூறியுள்ளார். அந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு ஓவரில் சிக்சர்கள் அடித்தாலோ, 6 விக்கெட்டுகள் எடுத்தாலோ போர் ஷே கார் வழங்கப்படும் என்று சவால் விடுத்தாக தெரிவித்துள்ளார் அவர். இந்த சவாலை யுவ்ராஜ் சிங் வென்றதாகவும், அதன்பிறகு தன்னிடம் அவர் ஓடி வந்து என்னுடைய போர் ஷே கார் எங்கே கேட்டதாகவும் லலித் மோடி கூறியுள்ளார்.
“2007 டி20 உலகக் கோப்பைக்கு முன், ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தாலோ அல்லது ஆறு விக்கெட்டுகளை எடுத்தாலோ போர்ஷே கார் பரிசாக வழங்கப்படும் என்று அனைவரிடமும் நான் சொன்னேன். அந்த சவாலில் யுவ்ராஜ் சிங் வெற்றி பெற்றார். உடனே என்னிடம் ஓடி வந்து போர் ஷே கார் எங்கே என்று யுவ்ராஜ் சிங் என்னிடம் கேட்டார்.நான், அவரிடம் பேட்டை வாங்கிக் கொண்டு போர்ஷே காரை பரிசாக கொடுத்தேன்” என்று லலித் மோடி, ‘பியாண்ட்23 போட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் கிளார்க்குடன் பேசும்போது கூறினார்.
2007 டி20 உலகக் கோப்பை தொடரில், யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டு அசத்தினார். அத்துடன் பல உலக சாதனைகளையும் அந்தப் போட்டியில் அவர் படைத்தார். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றிபெற யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், வெறும் 12 பந்துகளில் அரைசதம் அடித்து, டி20 வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
அத்துடன், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யுவராஜின் பேட்டிங் சிறப்பாக இருந்ததால் மட்டுமே, இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு முன்னேற முடிந்தது. அப்போட்டியிலும் வெற்றி பெற்று, முதன்முறையாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை எம்எஸ் தோனி தலைமையில் வென்று அபார சாதனையை படைத்தது.
About the Author
S.Karthikeyan