ஆசிய கோப்பை: சஞ்சு சாம்சனுக்கு இந்த இடம் மட்டும்தான்.. இல்லைனா அணியில் இடமில்லை!

Where will Sanju Samson bat: ஆசிய கோப்பை தொடர் வரும் 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. நடப்பு சாம்பியன் இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, யுஏஇ, ஓமன், ஹாங்காங், வங்கதேசம் என 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. இந்த சூழலில், இந்திய அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கப்போவது சஞ்சு சாம்சனா அல்லது சுப்மன் கில்லா என்ற கேள்வி கடந்த சில நாட்களாக ரசிகர்கள் இடையே விவாதமாகவே உள்ளது. 

Add Zee News as a Preferred Source

இந்த நிலையில், இது தொடர்பாக பேசி இருக்கிறார் முன்னாள் இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா. அவர், சஞ்சு சாம்சனுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தான் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்குமே தவிர்ஹ்த்து தொடக்க வீரராக வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி எப்படி இருக்கும் என்பதையும் விவரித்துள்ளார். 

அதில், என்னை கேட்டால், சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக தான் பயன்படுத்த வேண்டும் என கூறுவேன். ஏனென்றால், அவர் முதல் மூன்று இடத்தில் அதாவது டாப் 3-யில் களமிறங்கி 140 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 6000 ரன்களை குவித்திருக்கிறார். அவரை விக்கெட் கீப்பிங் பேட்டராக களமிறக்கினால் கூட டாப் 3 பேட்டிங்கில்தான் அவரை இறக்க வேண்டும். அவர் நடுவரிசையில் சரியாக விளையாடவில்லை. 

அவர் நான்காவது இடத்தில் இருந்து 7வது இடம் வரை 98 போட்டிகளில் அவருடைய சராசரி 20ஆக தான் உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 126 என்ற அளவில்தான் இருக்கிறது. அதேசமயம் கடைசியாக சஞ்சு சாம்சன் விளையாடிய 12 போட்டிகளில் மூன்று சதத்தை அவர் விளாசி இருக்கிறார். எனவே அவரை டாப் 3ல் தான் பயன்படுத்த வேண்டும். மாறாக நடுவரிசையில் அவரை களமிறக்கினால், அது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். 

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் இறக்குவதா அல்லது சஞ்சு சாம்சனை இறக்குவதா என்ற என்ற குழப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக டி20 கிரிக்கெட்டில் தன்னை நிருப்பித்துள்ளார். தற்போது கூட கேரளா கிரிக்கெட் லீக்கில் கூட அவர் தொடர்ந்து சதம் அடித்து நல்ல ரன்களை குவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.