மதுரை: மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் விலக வேண்டும் என வலியுறுத்தி மதுரை ஆதீன விஸ்வலிங்க தம்பிரான், ஆதீனம்மீது புகார் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரிநாதரின் மறைவுக்குப் பிறகு ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மதுரை ஆதினத்தின் 293ஆவது மடாதிபதியாவார். அதாவது, மதுரை குருமகா சந்நிதானத்தின் 293ஆவது சன்நிதானமாக, ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஸ்ரீ […]
