இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக விளங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், 2024 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின்போது சர்வதேச கிரிக்கெட் வீதிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உலக கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
Add Zee News as a Preferred Source
அவரது சர்வதேச ஓய்வு அறிவிப்பு பிறகு, 2025 ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடுவதில் அஷ்வின் ஆர்வம் காட்டி இருந்தார். CSK அணியானது 2025 மெகா ஏலத்தில் அஸ்வினை 9.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு அவர் CSK அணியில் தொடர்ந்தும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சமீபத்தில் அஸ்வின் திடீரென, “ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த நிலையில், அஸ்வின் வெளிநாட்டிற்கு சென்று டி20 லீக்கில் விளையாட இருக்கிறார். அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இண்டர்நேஷனல் லீக் டி20 (ILT20) தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக, அஸ்வின் “நான் அந்த தொடரில் விளையாட ஆவலுடன் உள்ளேன். ஏதாவது அணி என்னை வாங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.
ஐ.எல்.டி 20 லீக் போட்டியில், இந்தியாவின் முன்னாள் முன்னணி வீரர்கள் யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு போன்றோர் விளையாடி வருகின்றனர். அஷ்வினும் சேர்ந்தால் இந்த தொடர் மேலும் பரபரப்பாகும் என எதிர்பாரிக்கப்படுகிறது. அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 106 போட்டிகளில் 537 விக்கெட்டுகளுடன், அனில் கும்பிள் அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள சிறந்த இந்திய சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்துள்ளார். அதேபோல், 116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்களையும் டி20 கிரிக்கெட்டில் 72 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார்.
ஐபிஎல்லை பொறுத்தவரையில் 221 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் அஸ்வின். அவருடைய மிரட்டல் மற்றும் தலைமையுடனான போட்டிகள் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு புகழ்பெற்ற பாரம்பரியத்தைத் தந்து வந்தது. இப்போது அவர் களத்தில் இருந்து ஓய்வு பெற்று, புதிய லீக் மற்றும் கொள்கைகள் மூலம் புதிய தலைமுறையினருக்கு வழிகாட்டும் முனைவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
R Balaji