ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 800 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்

காபூல்: ஆப்​கானிஸ்​தானில் இரவில் அடுத்​தடுத்து ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தில் இது​வரை 800-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஏராள​மான கட்​டிடங்​கள் தரைமட்​ட​மாகி உள்​ளன. மீட்​புப் பணி​கள் முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன.

ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில் குணார் மாகாணம் ஜலாலா​பாத் அரு​கில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதில் பாகிஸ்​தான் எல்​லை​யில் உள்ள ஆப்​க​னின் கிராமங்​கள், பல மாடி கட்​டிடங்​கள் சரிந்து விழுந்​தன.

ஜலாலா​பாத்​துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்​தில் 8 கி.மீ. ஆழத்​தில் இந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​ட​தாக அமெரிக்க புவி​யியல் ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. குணார் மாகாணத்​தின் நூர் கால், சாவ்​கி, வாட்​பூர், மனோகி மற்​றும் சபா தாரா பகு​தி​களில் வீடு​கள், கட்​டிடங்​கள் நொறுங்​கிய​தால் உயி​ரிழப்பு அதி​கரித்​துள்​ளது.

குழந்​தைகள், பெண்​கள், முதி​ய​வர்​கள் என ஏராள​மான மக்​கள் இடி​பாடு​களில் சிக்​கி​யுள்​ளனர். ஞாயிற்​றுக்​கிழமை இரவு 11.47 மணி​யள​வில் முதல் நிலநடுக்​கம் 6.0 ரிக்​டர் அளவுக்கு ஏற்​பட்​டது. அதை தொடர்ந்து சில நிமிடங்​களில் 4.5 ரிக்​டர் அளவில் மீண்​டும் நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதில் இது​வரை 800-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும், 2,500-க்​கும் மேற்​பட்​டோர் கா​யம் அடைந்​துள்​ளனர்.

ஆப்​கானிஸ்​தானில் ஏற்​பட்ட நிலநடுக்​கம் தொடர்​பான சிசிடிவி காட்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கின்​றன. நிலநடுக்​கத்​தில் பல கிராமங்​கள் இருந்த வீடு​கள், பல மாடி கட்​டிடங்​கள் மண்​ணோடு மண்​ணாக சரிந்​துள்​ளன. இடி​பாடு​களில் ஏராள​மானோர் சிக்​கி​யிருக்​கலாம். இதனால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என்று அஞ்​சப்​படு​கிறது.

பாதிக்​கப்​பட்ட இடங்​களில் மீட்​புப் பணி​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன. பல கிராமங்​கள் முற்​றி​லும் சேதமடைந்​துள்​ளன. அதனால் உயி​ரிழந்​தோர் மற்​றும் காயம் அடைந்​தவர்​களின் எண்​ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்​டுள்​ளது. குணார், நங்​கார்​ஹர், தலைநகர் காபூல் போன்ற நகரங்​களில் இருந்து மருத்​து​வக் குழு​வினர் சென்​றுள்​ளனர் என்று பொது சுகா​தா​ரத் துறை அமைச்சக செய்​தித் தொடர்​பாளர் ஷராபத் ஸமான் கூறி​னார். ஆப்​கானிஸ்​தான் வரலாற்​றில் இந்த நிலநடுக்​கம் மிக மோச​மானது என்று கூறுகின்​றனர்.

பிரதமர் மோடி இரங்​கல்: ஆப்​கானிஸ்​தானில் நிலநடுக்​கம் ஏற்​பட்​டதை அறிந்து பிரதமர் மோடி மிகுந்த வேதனை தெரி​வித்​தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “ஆப்​கன் நிலநடுக்​கத்​தில் ஏராள​மானோர் உயி​ரிழந்​ததை அறிந்து மிக​வும் சோகம் அடைந்​தேன். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு இந்த நேரத்​தில் உறு​துணை​யாக இருப்​போம். அவர்​களுக்​காகப் பிரார்த்​தனை செய்​கிறோம். கா​யம் அடைந்​தவர்​கள் விரைந்து குணமடைய பிரார்த்​திக்​கிறேன். பா​திக்​கப்​பட்ட மக்​களுக்கு தேவை​யான அனைத்து மனி​தாபி​மான உதவி​களை​யும் இந்​தி​யா செய்​வதற்​கு தயா​ராக உள்​ளது” என்​று கூறியுள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.