பிரதமர் மோடி சென்ற ரஷ்ய அதிபர் புதினின் அவுரஸ் செனட் கார் – சிறப்பு அம்சங்கள் என்ன?

தியான்ஜின்: சீனா​வின் துறை​முக நகரான தியான்​ஜினில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) 2 நாள் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலை​யில், இந்​தியா – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​காக பிரதமர் மோடி​யும் புதினும் ஒரே காரில் பயணித்து கூட்​டம் நடை​பெறும் அரங்​குக்கு சென்​றுள்​ளனர்.

ரஷ்ய அதிபரின் இந்த சொகுசு காரின் பெயர் அவுரஸ் செனட் என்று அழைக்​கப்​படு​கிறது. அதிநவீன சொகுசு காரான இந்த அவுரஸ் செனட் காரை, விளாடிமிர் புதின் பயன்​படுத்தி வரு​கிறார். இந்த கார் ஃபோர்ட்​ரஸ் ஆன் வீல்ஸ் என்று அழைக்​கப்​படு​கிறது. அதாவது நகரும் கோட்டை என்று அழைக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த வகை அதிநவீன சொகுசு காரை ரஷ்​யா​வைச் சேர்ந்த அவுரஸ் மோட்​டார்ஸ் நிறு​வனம் தயாரிக்​கிறது. ரஷ்​யா​வின் என்​ஏஎம்ஐ, சோலர்ஸ் ஜேஎஸ்​சி, ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டவாசுன் ஹோல்​டிங் ஆகிய நிறு​வனங்​கள் இணைந்து இந்த அவுரஸ் மோட்​டார்ஸ் நிறு​வனத்தை நடத்​துகின்​றன. ரஷ்ய அதிபரின் பாது​காப்​புக்​காக பல்​வேறு சிறப்பு பாது​காப்பு வசதி​கள் இதில் செய்​யப்​பட்​டுள்​ளன.

2021-ல் அறி​முகம் செய்​யப்​பட்ட இந்த அவுரஸ் செனட் காரை, விளாடிமிர் புதின் அப்​போ​திருந்தே பயன்​படுத்தி வரு​கிறார். வெளியே பார்ப்​ப​தற்கு சொகுசு கார் போல தோற்​றமளிக்​கும் இந்த கார், இரும்​புக் கோட்டை போன்​றது. அதிநவீன கருவி​கள், வெளி​யே​யிருந்து யாராவது தாக்​கும்​போது அதைத் தடுப்​ப​தற்​கான வசதி​கள், குண்டு துளைக்​காத கண்​ணாடிகள், ராக்​கெட் துளைக்​காத கவச வாக​னம் போன்ற சிறப்​பு​கள் இதற்கு உண்​டு. இது​போன்ற காரை அவுரஸ் மோட்​டார்ஸ் நிறு​வனம் தயாரித்​து, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்​னுக்கு 2024-ம் ஆண்டு வழங்​கப்​பட்​டது.

இது​வரை 120 கார்​கள் மட்​டுமே இந்த வகை​யில் தயாரிக்​கப்​பட்​டுள்​ளன. 1.8 கோடி ரூபிள்​(ரஷ்ய கரன்​சி) விலை கொண்டது. இந்​திய மதிப்​பில் ரூ.2.5 கோடி​யாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.