ஒரு காலகட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் இர்பான் பதான். 2003ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர், 120 ஒருநாள் போட்டிகள், 29 டெஸ்ட் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். பந்து வீச்சில் சிறப்பாக செயல்படும் இவர், பேட்டிங்கிலும் சொல்லும்படியான ஆட்டத்தை ஆடி இருக்கிறார். அவரது கரியரில் ஒரு சதம் மற்றும் 12 அரைசதங்களை விளாசி இருக்கிறார். பந்து வீச்சாளராக 301 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இடது கை வீரர் என்பதால், அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமாக இருந்தது. 2012ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியே அவரது கடைசி போட்டியாகும்.
Add Zee News as a Preferred Source
அதன் பின்னர் கிரிக்கெட் விமர்சகராக வலம் வருகிறார் இர்பான் பதான். அவ்வப்போது இவர் கூறும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருக்கக்கூடும். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி குறித்து இவர் கூறிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இர்பான் பதான் தான் இந்திய அணியில் இருந்து திடீரென வெளியேறியதற்கான காரணத்தை மறைமுகமாக எம். எஸ். தோனியை குற்றம்சாட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
Sports Tak என்ற யூடியூப் சேனலில் பத்திரிக்கையாளர் விக்ராந்த் குப்தாவுடனான உரையாடலில், தனது செயல்திறன் இருந்தபோதிலும், அணியில் சேர்க்கப்படவில்லை. களத்திற்கு வெளியே உள்ள சூழ்நிலைகள் தான் நீக்கப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம் என்று மறைமுகமாகக் இர்பான் பதான் கூறி இருந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், இர்பான் பதான், 2008ல் மேற்கொண்ட ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை பற்றிப் பேசி இருந்தார். அந்த ஆஸ்திரேலியா தொடரின்போது, பதான் நன்றாக பந்து வீசவில்லை என்று தோனி குறிப்பிட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. தெளிவு தேடி, பதான் நேரடியாக தோனியை அணுகினார்.
“தொடரின் போது நான் அவரிடம் கருத்து பற்றி கேட்டேன். தோனி என்னிடம், ‘எல்லாம் நன்றாக நடக்கிறது, இர்பான், எதுவும் தவறாக இல்லை’ என்று கூறினார். ஆனால் அதே விஷயங்கள் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருந்தன, பதான்கள் தங்கள் கண்ணியத்தை நேசிப்பதால் நான் கேட்பதை நிறுத்தினேன்,” என்று அவர் கூறினார்.
எம். எஸ். தோனியை மறைமுகமாக விமர்சித்த இர்பான் பதான்
பின்னர் இர்ஃபான் பதான் ஒரு படி மேலே சென்று தோனியை நயவஞ்சகமாக விமர்சித்தார், அவர் ஒருவரின் (தோனியின்) அறையில் அவரை மகிழ்விக்க ஹூக்காவை அமைக்கும் ஒருவர் அல்ல என்று கூறினார். “எனக்கு யாருடைய அறையில் ஹூக்கா (புகைப்பிடிக்க பயன்படுத்த பைப் வடிவிலான ஒரு பொருள்) வைக்கும் பழக்கமோ அல்லது இதைப் பற்றிப் பேசும் பழக்கமோ இல்லை. எல்லோருக்கும் தெரியும். சில நேரங்களில், நீங்கள் அதைப் பற்றிப் பேசாமல் இருந்தால், அது நல்லது. ஒரு கிரிக்கெட் வீரரின் வேலை மைதானத்தில் சிறப்பாகச் செயல்படுவதுதான், அதில்தான் நான் கவனம் செலுத்தி வந்தேன்,” என்று அவர் கூறினார்.
பாரபட்சம் பார்க்கும் தோனி
பதானின் இந்தக் கருத்து, தோனியின் கேப்டன்சியின் போது அணியின் இயக்கவியலில் பாரபட்சமும், மைதானத்திற்கு வெளியேயான பிணைப்பும் ஒரு பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற ஊகத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தோனி ஹூக்கா பயன்படுத்தும் வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
About the Author
R Balaji