இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே அணி தலைவர் மஹேந்திர சிங் தோனி எப்போதும் அமைதியாகவும், வீரர்களை திட்டாமல் பொறுமையுடன் அணுகும் பண்பால் “கேப்டன் கூல்” என்று ரசிகர்களாலும், பிரபலங்களாலும் அழைக்கப்படுகிறார். ஆனாலும், சில சமயங்களில் அவரின் நிதானத்தையும் இழந்து, கோபத்துடன் வீரர்களின் குறைகளை வெளிப்படுத்தும் நிலையில் இருப்பார் என்று சிலர் சொல்கிறார்கள்.
Add Zee News as a Preferred Source
சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா, தோனிக்கும் தனக்கும் நடந்த ஒரு சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் ஒரு போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடியபோது தோனி, ஈஸ்வர் பாண்டேவை பந்து வீச அழைத்தார். ஆனால் நான் தவறுதலாக தன்னை அழைத்ததாக நினைத்து பந்தை எடுத்துக் கொண்டு ஓடியபோது, தோனி களத்தில் அவரை கண்டித்து நிறுத்தி “நீ ஏன் வந்தாய்..? நான் பாண்டேவையே அழைத்தேன்” என கூறினார்.
நடுவர் மோகித் சர்மா பந்து வீச தொடங்கி விட்டார். எனவே இப்போது மாற்றக்கூடாது, அவர்தான் பந்து வீச வேண்டும் என கூறிவிட்டார். இதனால் கோபமடைந்த தோனி, களத்திலேயே என்னை கடுமையாக திட்டினார். ஆனால், நான் யூசப் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியபோது, நாங்கள் அதை கொண்டாடினோம். சரி விக்கெட் எடுத்து விட்டதால், தோனி கோபம் குறைந்திருக்கும் என நினைத்தேன்.
ஆனால் கொண்டாட்டத்தின் போதும் தோனி என்னை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். தோனியுடன் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். ஆனால் சில சமயங்களில் அவர் தனது நிதானத்தை இழந்து விடுவார். மற்றபடி அவருடன் நீங்கள் விளையாடும்போது நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.
36 வயதான மோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 ஐபிஎல் சீசன்களில் விளையாடி இருக்கிறார். ஐபிஎல்லில் அறிமுகம் ஆகும்போதே சென்னை அணியில்தான் அறிமுகமானார். 2013 முதல் 2015 வரை மற்றும் 2019ஆம் ஆன்டில் விளையாடி இருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக மோகித் சர்மா 69 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் மொத்தமாக இதுவரை 120 போட்டிகளில் விளையாடி உள்ளார் மோகித் சர்மா. அதில் அவர் 134 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji