மதுரை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது மற்ற அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். ஸ்டாலின் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாடு அரசு பொய்யான தகவல்களை தந்து மக்களை ஏமாற்றுகிறது என கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தின்போது, 9ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 23 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள […]
