ஹூண்டாய் இந்தியாவின் க்ரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் Excellence 42 kWh, Executive Tech 42 kWh மற்றும் Executive (O) 51.4 kWh என மூன்று விதமான வேரியண்டடை சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ரூ.18.02 லட்சம் முதல் ரூ.23.67 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது.
க்ரெட்டாவில் 42Kwh மற்றும் 51.4Kwh என இரு விதமான பேட்டரியை கொண்டுள்ள நிலையில் முன்பாக 42kwh பேட்டரி மாடல் முன்பாக 390கிமீ சான்றிதழ் பெறப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது 420 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்து, டாப் வேரியண்டில் 51.4Kwh உள்ள நிலையில் முன்பு 473 கிமீ ஆக இருந்த நிலையில் 510 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்பொழுது டாப் Excellence 42kWh வேரியண்டில் லெவல் 2 ADAS, 8-வே அட்ஜெஸ்ட் பவர்டு முன் இருக்கைகள், முன்புற பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ-டிம்மிங் IRVM, மழை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள் இடம்பெற்றுள்ளது.
எக்ஸிகியூட்டிவ் டெக் 42kWh காரில் பனோரமிக் சன்ரூஃப், பின்புற சன்ஷேடுகள், வீகன் லெதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் போன்ற வசதிகள் உள்ளன, அனைத்து க்ரெட்டா எலக்ட்ரிக் வேரியண்டுகளில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியை அடாப்டர் மூலம் பெறுகின்றன.
அதே நேரத்தில் டாப் வேரியண்டில் டேஷ் கேமரா மற்றும் வயர்லெஸ் ரியர் சார்ஜிங் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. கூடுதலாக க்ரெட்டாவில் மேட் பிளாக் மற்றும் ஷேடோ கிரே வண்ண விருப்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.