ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

மேக்ஸி ஸ்டைல் பெற்ற அட்வென்ச்சருக்கு ஏற்ற ஜூம் 160 ஸ்கூட்டர் ஜனவரி 2025ல் விலை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது முன்பதிவு நடைபெற்று வருவதனால் விநியோகம் நடப்பு செப்டம்பரில் துவங்க உள்ளதாக தனது சமூக ஊடகப்பக்கங்களில் உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஜூம் 160 ஆனது பிரீமியா ஹீரோ டீலர்களில் மட்டுமே கிடைக்கும் என்பதனால் முக்கிய நகரங்களில் மட்டுமே முதற்கட்டமாக டெலிவரி வழங்கப்பட உள்ளது.

ஏரோக்ஸ் 155 மற்றும் வரவிருக்கும் என்டார்க் 150 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்ற ஜூம் 160ல் லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்று  156சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 8,000rpm-ல் அதிகபட்சமாக 14.6 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 14 NM டார்க் வழங்குகின்றது. இதில் தொடர்ந்து சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகின்றது.

இரு பக்கத்திலும் 14 அங்குல வீல் வழங்கப்பட்டு ரூ.1.49 லட்சத்தில் கிடைக்கின்ற இந்த மாடலில் எல்சிடி கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் கூடுதலாக ரிமோட் கண்ட்ரோல் கீ வசதி மற்றும் சிறப்பான பூட் ஸ்பேஸ் உடன் நீண்ட தொலைவு பயணங்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜூம் 160ல் பல்வேறு ஆக்செரீஸ்களும் கிடைக்கின்றது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.