IPL Ticket Price Hike: ஜிஎஸ்டி வரி அடுக்குகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர உள்ளது. தற்போது ஜிஎஸ்டியை பொருத்தவரை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய வரி அடுக்குகள் உள்ளன. இதில், 12% மற்றும் 28% அடுக்குகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% மட்டுமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source
40% வரி எதற்கெல்லாம்?
அதேநேரத்தில், ஒகு சில சரக்கு மற்றும் சேவைகளுக்கு 40% வரிகளும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி சீர்திருத்தம் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1200 cc விட அதிகமான திறன் கொண்ட பெட்ரோல் கார்கள்; 1500 cc விட அதிகமான திறன் கொண்ட டீசல் கார்கள்; 350 cc விட இருச்சக்கர வாகனங்கள்; தனிப்பட்ட பயன்பாட்டுக்கான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், சொகுசு கப்பல்கள், பான் மசாலா, புகையிலை, குட்கா, பீடி, கார்பேனற்றப்பட்ட பானங்கள் உள்ளிட்டவைகளுக்கு 40% வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுகளுக்கும் 40%…
அது மட்டுமின்றி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த சேவைகளுக்கு இதுவரை 28% வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அது 40% ஆக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐபிஎல் டிக்கெட்டுகளும் இந்த வரி அடுக்கில்தான் வரும். மேலும், கேசினோ, ரேஸ் கிளப்கள் போன்றவற்றுக்கும் 40% வரி வசூலிக்கப்படும்.
இதுவரை ஐபிஎல் டிக்கெட் விலை
இதன்மூலம், அடுத்த 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டிக்கெட்டின் விலை நிச்சயம் அதிகரிக்கும் எனலாம். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் அனைத்தும் ஆன்லைனில் விற்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.7500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இதில், கடந்தாண்டு 1700 ரூபாய் டிக்கெட்டுக்கு 28% வரி வசூலிக்கப்பட்டது. இதனால், டிக்கெட்டின் விலை ஜிஎஸ்டி சேர்த்து 2176 ரூபாய் ஆகும். அதாவது 476 ரூபாய் வரியாக வசூலிக்கப்படுகிறது.
இனி ஐபிஎல் டிக்கெட் விலை
தற்போது ஐபிஎல் போன்ற விளையாட்டுகளின் டிக்கெட் விலையில் 40% வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், 1700 ரூபாய் டிக்கெட்டு இனி 2380 ரூபாயில் விற்கப்படும். கடந்த சீசனை விட 2026 சீசனில் 204 ரூபாய் கூடுதலாகும். இது ரசிகர்களுக்கு பெரிய ஷாக்கை கொடுத்துள்ளது. ஏற்கெனவே சிஎஸ்கே போட்டிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் திண்டாடும் சூழலில், இந்த ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடம் சோகத்தை உண்டாக்கி உள்ளது.
About the Author
Sudharsan G