எலான் மஸ்க், X-ஐ “everything app”, அதாவது அனைத்திற்குமான செயலியாக மாற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், எலான் மஸ்கின் மூலம், அதாவது X -இன் மூலம் பயனர்கள் எவ்வாறு பணம் ஈட்டலாம் என்பது பற்றி அவரது உயர்மட்ட ஊழியர்களில் ஒருவர், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பணம் சம்பாத்திப்பதில் ஜித்தனான எலான் மஸ்கை வைத்தே நாம் பணம் சம்பாதிக்க முடியும் என்றால், அந்த வாய்ப்பை விடலாமா? அந்த ஊழியர்கள் கொடௌத்துள்ள டிப்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Add Zee News as a Preferred Source
X-ன் பிராடக்ட் ஹெட் கூறியது என்ன?
X-ன் பிராடக்ட் ஹெட் ஆக இருக்கும் நிகிதா பியர், சமூக ஊடக தளத்தில் பணக்காரர் ஆவதற்கான நேரடியான ப்ளூபிரிண்டடை X -இல் பகிர்ந்துள்ளார். பணம் சம்பாதிக்க அவர் அப்படி என்ன வழியை கூறியுள்ளார் தெரியுமா?
– குறுக்கு வழிகளால் எந்த பிரயோஜனமும் இல்லை.
– மற்ற அனைவரையும் விட உங்களுக்கு அதிகமாக தெரிந்த, நீங்கள் அதிக புலமை கொண்ட ஒரு விஷயத்தை எடுத்து அதில் உங்கள் ஆதிக்கத்தை காட்ட வேண்டும்.
“நீங்கள் X-ல் பணக்காரர் ஆக விரும்பினால், அது கிரியேட்டர் ரெவென்யூ மீம் காயின்ஸ் மூலம் நடக்காது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “அதற்கு பதிலாக, உலகில் உள்ள வேறு எவரையும் விட நீங்கள் அதிகம் அறிந்த ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். அது பிளம்பிங், ஆடை வடிவமைப்பு, இந்திய உணவு, தளபாடங்கள், சமூக செயலிகள் என எதுவாக வெண்டுமானாலும் இருக்கலாம்” என அவர் கூறியுள்ளார்.
If you want to get rich on X, it isn’t going to be through creator revenue or meme coins.
Instead, think about one subject matter that you know more about than anyone else in the world. It can be anything: plumbing, menswear, Indian food, furniture, social apps, whatever.
Post…
— Nikita Bier
5 வரிகள், 6 மாதங்கள்
இது மிக எளிமையானதாகத் தோன்றினாலும், இதன் பின்னால் ஒரு தெளிவான உத்தி உள்ளது. பயனர்கள் அவர்களுக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கி, தினசரி, சிறிய அளவிலான கண்டெண்டுகள் மூலம் அதில் நிலைத்திருக்க வேண்டும் என்று பியர் அறிவுறுத்துகிறார். “உங்க்களுக்கு அதிக ஆர்வம் மற்றும் புலமை உள்ள ஒரு விஷயத்தை பற்றி, உங்கள் அனுபவம் மூலம் நீங்கள் அறிந்துகொண்ட, யாருக்கும் தோன்றாத, யாரும் கேள்விப்படாத ஒரு கருத்தை பதிவிடுங்கள். இந்த பதிவை 5 வரிகளுக்கு மட்டுப்படுத்துவது நல்லது. இப்படி தினமும் 6 மாதங்களுக்கு செய்து பாருங்கள்.” என்று அவர் கூறியுள்ளார்.
சுவாரசியமான கட்டம்
அடுத்த கட்டம்தான் சுவாரசியமான கட்டம். அதிக ஈடுபாடோடு இந்த முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு X-இலிருந்து கூடுதல் உதவி கிடைக்கும் என்றும் பியர் மேலும் கூறினார். “நீங்கள் இதை தொடர்ந்து செய்தால், உங்கள் கணக்கை மற்றவர்களிடம் நாங்கள் பிரமோட் செய்வோம்” என்று அவர் உறுதியளித்தார்.
அதிசயமான தொலைநோக்கு பார்வை
அவரது தொலைநோக்கு பார்வை கவர்ச்சிகரமானது. 6 மாத காலம் நீங்கள் அதிக புலமை கொண்ட விஷயத்தில் இந்த முயற்சியை எடுத்த பின்னர், உங்கள் சப்ஜெக்டில் நீங்கள் உங்களை ஒரு ‘கோ-டு’ நபராக நிலைநாட்டிக்கொள்ளலாம். “நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயத்தில் உலகின் முன்னணி நிபுணராக நீங்கள் அங்கீகரிக்கப்படுவீர்கள். எண்டோர்ஸ்மெண்டுகளுக்கு நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் வசூலிக்க்லாம். உங்களுக்கான இந்த இடத்தை யாரும் உங்களிடமிருந்து எடுக்க முடியாது” என்று அவர் தெரிவிக்கிறார்.
பலர் தொழில்முறை படைப்பாளராக மாறவும், ஆன்லைனில் தங்கள் இருப்பைப் பணமாக்கவும் விரும்பும் இந்த நேரத்தில், இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் நடவடிக்கையாக இருக்கும். பல ஆண்டுகளாக, தளங்கள் படைப்பாளர் நிதிகள், விளம்பர வருவாய்ப் பிரிவுகள் மற்றும் பிராண்ட் கூட்டாண்மைத் திட்டங்களைத் தொங்கவிட்டுள்ளன. ஆனால், ஏற்கனவே இணையத்தில் பிரபலமாக இல்லாதவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் மிக குறைவான தொகையே கிடைப்பதாக பல பயனர்கள் கூறுகின்றனர். பியரின் பரிந்துரை கண்டென்ட் உருவாக்கத்தில் உள்ள பழமையான கொள்கையான நிலைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் தங்களுக்கென்று ஒரு முக்கிய இடத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
பியர் சொன்னதை அனைவராலும் செய்ய முடியுமா என்பது வேறு விஷயம். ஆறு மாதங்களுக்கு தினசரி ஒரே வகையான பதிவுகளில் கவனம் செலுத்துவது மிக கடினமான விஷயமாக இருக்கலாம். குறிப்பாக கவனக் காலம் குறைவாகவும், வைரல் கண்டெண்டுகள் அதிகமாகவும் இருக்கும் இந்த காலத்தில் இது மிக கடினம். ஆனால் பியரின் கருத்து என்னவென்றால், சிறப்பு நிபுணத்துவம் கொண்டவர்கள் விரைவான வைரல் பதிவுகளை விட நீண்ட காலம் நீடிக்கும் பதிவுகளை உருவாக்குவதை எளிதாக செய்துவிடுவார்கள். அவரது பார்வையில், வெகுமதி என்பது இதிலிருந்து கிடைக்கும் செல்வாக்கு மட்டுமல்ல. உங்கள் சொந்த முயற்சியால், சொந்த நிபுணத்துவத்தால், சொந்த திறனால் அதை பெறுவதுதான் உண்மையான வெகுமதி.
About the Author
Sripriya Sambathkumar