ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

துவக்க நிலை சந்தைக்கான எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வெளியிடப்பட்டுள்ள ID.Cross மிக சிறப்பான டிசைனுடன் முழுமையான சார்ஜில் 425 கிமீ ரேஞ்ச் வழங்கும் எனவும் உற்பத்திக்கு 2026 ஆம் ஆண்டின் மத்தியில் செல்ல உள்ளதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

முன்பாக நாம் பார்த்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஸ்கோடா எபிக் மாடலும் இந்த ஐடி.கிராஸ் என இரண்டு ஒரே பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொண்டு துவக்க நிலை ஐரோப்பா சந்தையில் கிடைக்க உள்ளது. இந்தியாவிற்கான மாடல் இதன் அடிப்படையிலான இந்திய சந்தைக்கு ஏற்றதாக மாற்றப்பட்டு விற்பனைக்கு 2026 இறுதி அல்லது 2027 துவக்க மாதங்களில் வரக்கூடும்.

IAA MOBILITIY 2025ல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கான்செப்ட் கார் 4,161 மிமீ நீளமும், 1,839 மிமீ அகலமும் 1,588 மிமீ உயரமும் மற்றும் 2,601 மிமீ வீல்பேஸ் கொண்ட ஐடி. கிராஸ் கான்செப்ட்  அதன் அளவுகளில் தற்போதைய டி-கிராஸைப் போன்றது. இருப்பினும், கான்செப்ட் வேறுபட்டதாக அமைந்து ஐடி மாடலுக்காக  21 அங்குல அலாய் வீலை பெற்று 235/40 R21 டயர்கள் ஷோ காருக்காக வடிவமைக்கப்பட்டன.


volkswagen ID.Cross Electricvolkswagen ID.Cross Electric

இ்ன்டீரியரில் மிக எளிமையான வடிவமைப்பினை பெற்று ஃபுளோட்டிங் முறையிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 5 இருக்கை பெற்றுள்ள இந்த காரில் 450 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் முன்புறத்தில் 25 லிட்டர் டரன்க் ஸ்டோரேஜ் உள்ளது.

வெண்ணிலா சாய் (பழுப்பு நிறத்தின் சூடான நிழல்) உட்புறத்தினை கொண்டு ஐடி.கிராஸ் மிக அழகான டேஸ்போர்ட் மற்றும் இருக்கையை கொண்டதாக அமைந்துள்ளது.

MEB+ FWD முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ID.Cross எஸ்யூவி 155 kW அல்லது 211 PS பவர் வெளிப்படுத்துவதுடன் மணிக்கு 175 கிமீ வேகத்தை எட்டுவதுடன் முழுமையான சார்ஜில் 420 கிமீ பயணிக்கலாம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ID. CROSS Concept – Technical data
Drive MEB+, front-wheel drive
Power 155 kW / 211 PS
Range up to 420 km (WLTP)
Top speed 175 km/h
Length 4,161 mm
Width 1,839 mm
Height 1,588 mm
Wheelbase 2,601 mm
Stowage capacity with five people on board 450 l + 25 l frunk
Drawbar load 75 kg
Trailer weight (maximum) 1,200 kg (braked, 8 per cent gradient)
Wheels 235/40 R21

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.