ஆசிய கோப்பையை இந்தியாலாம் வெல்லாது.. சவால் விட்ட பாகிஸ்தான் கேப்டன்!

2025 ஆசிய கோப்பை தொடர் நேற்று (செப்டம்பர் 09) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, யுஏஇ, ஹாங்காங், ஓமான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்றுள்ளன. முதல் போட்டியாக குரூப் ‘பி’-ல் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியும்  ஹாங்காங் அணியும் மோதின. இப்போட்டியை ஆப்கானிஸ்தான் அணி எளிதாக வென்றது. முதலில் பேட்டிங் செய்து அப்கானிஸ்தான் அணி 188 ரன்கள் எடுத்தது. அதனை துரத்திய ஹாங்காங் அணி 94 ரன்களில் சுருண்டதால், ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்களில் அபார வெற்றி பெற்றது. 

Add Zee News as a Preferred Source

தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இன்று (செப்டம்பர் 10) இந்திய அணி யுஏஇ அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியை அடுத்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. இந்திய அணி ரோகித் சர்மா, விராட் கோலி அல்லாமல் இளம் வீரர்களுடன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்குகிறது. அதேபோல் பாகிஸ்தான் அணியும் அந்த அணியின் முக்கிய வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இல்லாமல் சல்மான் ஆகா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது. 

2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் வெல்வதர்க்கு பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் முக்கிய பங்காற்றினார்கள். ஆனால் அதை அடுத்து மற்ற போட்டிகளில் படுமோசமாக விளையாடி அந்த அணி தொடர் தோல்விகளை பெற அவர்கள் காரணமாகினர். இதனாலேயே அவர்களை பாகிஸ்தான் அணி கழற்றிவிட்டு சல்மான் ஆகா தலைமையில் அணியை அமைத்தது. இந்த நிலையில், டி20. கிரிக்கெட்டை பொறுத்தவரையில் முன்கூட்டியே வெற்றியாளரை கணிக்கமுடியாது என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், நாங்கள் விளையாடும் சிறந்த கிரிக்கெட்டை கடந்த சில மாதங்களுக்கு மன்பாக தொடங்கினோம் என நினைக்கிறேன். அணியாக சேர்ந்து நன்றாக விளையாடுவது எங்களிடையே கூடி வருகிறது. எனவே ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கு நாங்கள் ஆவளுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறோம். டி20 கிரிக்கெட்டில் யாரும் வெற்றியாளர் என்றும் முன்கூட்டியே சொல்லிவிட முடியாது. ஏனென்றால், ஓரிரு ஓவர்களிலேயே போட்டி எப்படி வேண்டுமானாலும் மாறும். சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் பெற்ற வெற்றி எங்களுக்கு இத்தொடருக்கு தயாராக நல்ல இடத்தை கொடுத்தது. ஆசிய கோப்பையை வெல்வோம். அதுவே எங்களின் மனநிலையாக உள்ளது என அவர் கூறினார்.  

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா. 

பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்சாதா ஃபர்ஹான், சயீம் அய்ரூப்டி, சல்மான் அய்ரூப்டி மொகிம்.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.