Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடர் 2025 மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (செப். 9) தொடங்கியது. 8 அணிகள் விளையாடும் இந்த தொடரில் இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரம், ஓமன் அணிகளும்; பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகளும் இடம்பெற்றுள்ளன
Add Zee News as a Preferred Source
Asia Cup 2025: ஆசிய கோப்பையில் இந்திய அணி
அபுதாபியில் நடந்த முதல் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஹாங் காங் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இன்று 2வது போட்டியில் இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இன்று (செப். 10) துபாயில் மோதுகிறது. நடப்பு டி20 உலகக் கோப்பை சாம்பியனும் ஆசிய கோப்பையை தக்கவைக்க தீவிரமாக இருக்கும்
இந்திய அணி இத்தொடரை வெல்லும் என பெரிதும் கணிக்கப்படுகிறது. முதல் சுற்றைப் பொருத்தவரை ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளை இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளும் எளிதாக வீழ்த்திவிடும் என்பதால் சூப்பர் 4 சுற்றுக்கு இரு அணிகளும் தகுதிபெற்றுவிடும் என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில், செப். 14ஆம் தேதி போட்டியில் யார் வெற்றிபெறப்போவது என்பதுதான் ஆர்வத்தை கிளப்பி உள்ளது.
Asia Cup 2025: இந்த 3 வீரர்கள் விளையாட மாட்டார்கள்
இந்திய அணியே பலமான அணியாக தோற்றமளிக்கிறது. இந்திய அணி அதன் பிளேயிங் லெவனை இறுதிசெய்துவிட்டது. முதல் சுற்றில் 3 போட்டிகள், சூப்பர் 4 சுற்றில் 3 போட்டிகள், இறுதிப்போட்டி என சேர்த்தால் மொத்தம் 6-7 போட்டிகளில் இந்தியா விளையாடப்போவது உறுதி. 6-7 போட்டிகளில் பெரும்பாலும் இந்த 15 வீரர்கள் கொண்ட ஸ்குவாடில் இந்த 12 வீரர்கள் மட்டும் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் விளையாடப்போகிறார்கள். அந்த இந்த 3 வீரர்கள் மட்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பது கடினம். இதன்மூலம், ஆசிய கோப்பை தொடரில் இந்த 3 வீரர்கள் விளையாட மாட்டார்கள் எனலாம்.
Team India: ரிங்கு சிங்
ரிங்கு சிங் ஸ்குவாடில் எடுத்தபோதே பலரும் கேட்ட கேள்வி, பிளேயிங் லெவனில் எந்த இடத்தில் இவர் விளையாடப்போகிறார் என்பதுதான். கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார், திலக், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் என நம்பர் 6 வரை ரிங்கு சிங்கிற்கு இடமில்லை. சஞ்சு சாம்சன் அல்லது ஜித்தேஷ் உள்ளே வந்தார்கள் என்றால் ரிங்கு சிங் இன்னும் கீழ்வரிசையில் பேட்டிங் விளையாட வேண்டிய சூழல் வரும். அக்சர் பட்டேல் இல்லாவிட்டாலும் அந்த இடத்தில் சிவம் தூபே தான் விளையாடுவார் என்பதால் நடப்பு ஆசிய தொடரில் இவர் விளையாட வாய்ப்பே இல்லை.
Team India: ஹர்ஷித் ராணா
ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பிளேயிங் லெவனில் பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பேக்அப்பாகவே ஹர்ஷித் ராணா இருப்பார். யாருக்காவது காயமடைந்தால் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கிடைக்கும். பிளேயிங் லெவனில் ஒருவேளை பும்ரா விளையாடாவிட்டாலும் தூபேவுக்குதான் வாய்ப்பு கிடைக்காது, ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு கிடைக்காது. மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக பேட்டிங் ஆப்ஷனும் கிடைக்க தூபேவே சரியான நபர்.
Team India: சஞ்சு சாம்சன்
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பிரதான விக்கெட் கீப்பர் பேட்டராக ஜித்தேஷ் சர்மாவே விளையாட உள்ளார். சுப்மான் கில்லும் ஓபனிங்கில் வருவதால் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனிலும் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது எனலாம். ஓபனிங்கில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனலாம்.