Jio vs Airtel Postpaid: நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற OTT தளங்கள் இன்று பொழுதுபோக்கின் ஒரு அங்கமாகிவிட்ட நிலையில், டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்தச் சேவைகளை இலவசமாக வழங்கும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற நிறுவனங்களின் பல்வேறு திட்டங்கள் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளன.
Add Zee News as a Preferred Source
ஜியோவின் 749 ரூபாய் போஸ்ட்பெய்ட் திட்டம்
நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்சனை வழங்கும் ஜியோவின் சூப்பர் பிளான்களில் ஒன்று. இந்தத் திட்டத்தில் 100 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ் இலவசமாக கிடைக்கும். குறிப்பாக, இந்தத் திட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ் பேசிக் சந்தா, இரண்டு ஆண்டுகளுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா மற்றும் ஜியோவின் இதர செயலிகளுக்கான அணுகல் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், ஜியோவின் 9-வது ஆண்டு விழா சிறப்புச் சலுகையாக, ஜியோ ஃபைனான்ஸ் பயனர்களுக்கு கூடுதல் பலன்கள் மற்றும் ஜியோ ஏஐ கிளவுடில் 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற நன்மைகளும் கிடைக்கின்றன.
ஏர்டெல் ரூ. 1399 திட்டம்
மறுபுறம், ஏர்டெல்லின் ரூ. 1399 திட்டம் அதிக விலையில் இருந்தாலும், பல கூடுதல் அம்சங்களை வழங்குகிறது. மொத்தம் 240 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் ஆகியவை அடங்கும். இந்த திட்டத்தின் தனிச்சிறப்பு, நெட்ஃபிளிக்ஸ் பேசிக், ஆறு மாதங்களுக்கு அமேசான் பிரைம், ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஆகியவை இலவசமாக கிடைக்கும். கூடுதலாக, ஆப்பிள் டிவி+, ஆப்பிள் மியூசிக் மற்றும் கூகுள் ஒன்-ல் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற பிரீமியம் சேவைகளும் இதில் அடங்கும்.
ஜியோ மற்றும் ஏர்டெல்லைப் போலவே, பிற நிறுவனங்களும் இதேபோன்ற திட்டங்களை வழங்குகின்றன. பிஎஸ்என்எல்-ன் 798 ரூபாய் திட்டம் 50 ஜிபி டேட்டா மற்றும் அமேசான் பிரைம், இசட்5 பிரீமியம் சந்தாவை வழங்குகிறது. மேலும், 998 ரூபாய் திட்டத்தில் 75 ஜிபி டேட்டாவுடன் அதே OTT சலுகைகள் கிடைக்கின்றன. வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் 601 ரூபாய் மற்றும் 1001 ரூபாய் விலையில் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களில் முறையே 50 ஜிபி மற்றும் 100 ஜிபி டேட்டாவுடன், ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற OTT சேவைகளுக்கான சப்ஸ்கிரிப்சனை கொடுக்கின்றன.
இவற்றில் எது பெஸ்ட் என்றால், உங்கள் பட்ஜெட்டை பொறுத்து சரியான திட்டத்தைத் தேர்வு செய்வது அவசியம். குறைந்த விலையில் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் மட்டுமே தேவைப்படுபவர்களுக்கு ஜியோவின் 749 ரூபாய் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். அதேசமயம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற கூடுதல் OTT தளங்கள், அதிக டேட்டா மற்றும் பிரீமியம் சேவைகள் தேவைப்படுபவர்களுக்கு ஏர்டெல் 1399 ரூபாய் திட்டம் பொருத்தமானதாக இருக்கும்.
About the Author
S.Karthikeyan