India vs Pakistan: ஆசிய கோப்பை தொடர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 09) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு லீக் ஆட்டங்கள் முடிவடைந்திருக்கிறது. நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், யுஏஇ, இலங்கை, வங்கதேசம், ஹாங்காங், ஓமன் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஜக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் இத்தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின.அதில் ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
Add Zee News as a Preferred Source
இதையடுத்து நேற்று (செப்டம்பர் 10) யுஏஇ அணியை எதிர்கொண்டு இந்திய அணி விளையாடியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி அதனை 4.3 ஓவர்களிலேயே அடித்து ஆசாத்திய வெற்றியை பெற்றது. இந்த நிலையில், இந்திய அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணியை 14ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.
ஆசிய கோப்பை தொடர் அறிவித்ததில் இருந்தே இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுமா என்ற கேள்வி இருந்தது. இதற்கு காரணம் கடந்த ஏப்ரம் மாதம் பகம்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலே. அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது. இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் பாதித்தது. இதையடுத்து லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் உடன் விளையாடுவதை நிராகரித்து வெளியேறினர். இதன் காரணமாக ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், “நாட்டு நலனை விட கிரிக்கெட்டை மேலானதாக நினைக்ககூடாது. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவது எதிர்மறையான கருத்தை பிரதிபலிக்கும். பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும். எனவே இந்தியா – பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். அத்துடன் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், “ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது. போட்டி திட்டமிட்டப்படி நடக்கும். அத்துடன் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது,” என கூறி உள்ளது.
About the Author
R Balaji