India vs West Indies Test Series: இந்திய அணி சுமார் 11 மாதங்களுக்கு பிறகு உள்நாட்டில் டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 14ஆம் தேதி இந்த டெஸ்ட் தொடர் நிறைவடைகிறது.
Add Zee News as a Preferred Source
IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்
முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் அக். 2 முதல் அக். 6 வரை நடைபெற உள்ளது. 2வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் அக். 10 முதல் அக். 14 வரை நடைபெற உள்ளது. இன்னும் இத்தொடர் தொடங்க மூன்று வாரக் காலமே இருக்கிறது. இந்திய டி20 அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வரும் சூழலில், விரைவிலேயே மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய டெஸ்ட் ஸ்குவாட் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
IND vs WI: ஸ்குவாடில் வித்தியாசம் இருக்கும்
கடைசியாக கடந்தாண்டு அக்டோபர் – நவம்பரில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 0-3 என்ற கணக்கில் வைட்வாஷ் செய்யப்பட்டது. அதற்கு பின் இந்திய அணி உள்நாட்டில் இப்போதுதான் விளையாட இருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர்களின் நாட்டிலேயே 2-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை டிரா செய்ததால் பெரும் நம்பிக்கையுடன் இந்திய அணி இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய ஸ்குவாடுக்கும், தற்போது மேற்கு இந்திய தீவுகளுக்கு அணி தொடருக்காக அறிவிக்கப்பட இருக்கும் ஸ்குவாடுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
IND vs WI: கில், ரிஷப் பண்ட் கிடையாது
குறிப்பாக மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. சுப்மான் கில் தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறார், அவர் துணை கேப்டன் என்பதால் அனைத்து போட்டிகளில் விளையாடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆசிய கோப்பை தொடர் செப். 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தியா நிச்சயம் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும், இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாவிட்டாலும் செப். 25 அல்லது செப். 26 வரை இந்தியாவுக்கு போட்டி இருக்கும் எனலாம்.
எனவே, ஆசிய கோப்பை முடிந்த கையோடு அவர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. எனவே, இந்திய டெஸ்ட் கேப்டன் மாற உள்ளதாக கூறப்படுகிறது. துணை கேப்டன் ரிஷப் பண்ட் இன்னும் காயத்தில் இருந்து மீண்டு உடற்தகுதி பெறவில்லை என்பதால் அவரும் ஸ்குவாடில் இருக்க மாட்டார்
IND vs WI: கேப்டன் கேஎல் ராகுல்…!
. அந்த வகையில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது. குறைந்தபட்சம் முதல் போட்டியில் மட்டும் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது, இரண்டாவது போட்டியில் கில் இணைய வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட் இல்லாத சூழலில், துருவ் ஜூரேல் பிரதான விக்கெட் கீப்பராக அணியில் இடம்பெறுவார், நாராயண் ஜெகதீசன் பேக்அப் விக்கெட் கீப்பராக வருவார் எனலாம்.
About the Author
Sudharsan G