Tata Punch and Nexon New Rate: GST விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகு, கார் வாங்குவது இப்போது இன்னும் எளிதாகவும் மலிவாகவும் மாறிவிட்டது. அதன்படி நீங்கள் தற்போது SUV காரை (Compact SUVs) வாங்க திட்டமிட்டிருந்தால், சந்தையில் பல விருப்பங்கள் உள்ளன. ஆனால் டாடா மோட்டார்ஸின் சிறிய SUV காரான டாடா பஞ்ச் மற்றும் டாடா நெக்ஸான் (Tata Punch and Tata Nexon) ஆகியவை அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். இந்த இரண்டு கார்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன, மேலும் இந்த இரண்டு கார்களிலும் CNG மாறுபாட்டின் விருப்பத்தையும் நிறுவனம் வழங்கியுள்ளது.
Add Zee News as a Preferred Source
அதுமட்டுமின்றி தற்போது ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், டாடா மோட்டார்ஸ் டாடா நெக்ஸானுக்கு அதிகபட்ச நன்மையை பெற முடியும். அந்த வகையில் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகு, டாடா நெக்ஸான் காரில் ரூ.1.55 லட்சம் வரை நன்மையைப் பெறலாம். அதே நேரத்தில், டாடா பஞ்சில் ரூ.85000 வரை குறைப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த இரண்டு கார்களும் தற்போது மேலும் மலிவு விலையில் விற்பனை செய்யபடும். எனினும் இந்த விலைகள் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் மட்டுஏ பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tata Punch மீது ரூ.85000 வரை தள்ளுபடி
Tata Punch நிறுவனத்தின் காம்பாக்ட் எஸ்யூவியில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும், மேலும் இந்த காரில் ரூ.85000 வரை சலுகைகளை நிறுவனம் வழங்குகிறது. டாடா பஞ்சின் டாப் வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.32 லட்சம் மற்றும் இந்த காரில் ரூ.85000 வரை குறைப்பு உள்ளது, இத்தகைய சூழ்நிலையில், இந்த காரின் புதிய விலை ரூ.9.47 லட்சம் வரை இருக்கக் கூடும்.
Tata Punch (Top Variant)
பழைய விலை – ₹10.32 லட்சம்
ஜிஎஸ்டி சலுகை – ₹85,000
புதிய விலை – ₹9.47 லட்சம்
Tata Nexon காரில் மீது அதிக நன்மையை பெறலாம்
Tata Nexo நிறுவனத்திடமிருந்து ரூ.1.55 லட்சம் வரை தள்ளுபடி பெறுகிறது. இது ஜிஎஸ்டி சலுகையின் கீழ் வழங்கப்படுகிறது. டாடா நெக்ஸானின் டாப் வேரியண்ட்டைப் பற்றிப் பேசுகையில், பெட்ரோல் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.94 லட்சம், சிஎன்ஜி வேரியண்ட் விலை ரூ.16.72 லட்சம் மற்றும் டீசல் வேரியண்ட் விலை ரூ.18.35 லட்சம் ஆகும். இந்த மூன்றின் புதிய விலை என்னவாக இருக்கும் என்பது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
Tata Nexon (Petrol-Top Variant)
பழைய விலை – ₹16,94,000
ஜிஎஸ்டி சலுகை – ₹1,55,000
புதிய விலை – ₹15,39,000
Tata Nexon (CNG-Top Variant)
பழைய விலை – ₹16,72,000
ஜிஎஸ்டி சலுகை – ₹1,55,000
புதிய விலை – ₹15,17,000
Tata Nexon (Diesel-Top Variant)
பழைய விலை – ₹18,35,000
ஜிஎஸ்டி சலுகை – ₹1,55,000
புதிய விலை – ₹16,80,000
About the Author
Vijaya Lakshmi