300 ரூபாய்க்காக தொழிலாளி கொலை – 2 பேர் கைது

பெங்களூரு,

பல்லாரி மாவட்டம் ஏ.பி.எம்.சி. போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் முகமது ஆசிப் என்பவரின் வீட்டுக்கு பின்பு ஒரு தொழிலாளி தலை நசுங்கியபடி கடந்த 5-ந் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்?.

எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஏ.பி.எம்.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில், தொழிலாளியை கொன்றதாக பால்ராஜ், அனுமந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 4-ந் தேதி குடிபோதையில் இருந்த 2 பேருக்கும், மேலும் மது குடிக்க பணம் தேவைப்பட்டுள்ளது. யாரும் பணம் கொடுக்காததால், அந்த பகுதியில் சுற்றிய தொழிலாளியின் தலையில் கல்லைப்போட்டு கொன்றுவிட்டு, ரூ.300-ஐ கொள்ளையடித்தது தெரிந்தது. கைதான பால்ராஜ், அனுமந்த் ஆகியோர் மீது ஏ.பி.எம்.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.