India vs Pakistan Asia Cup 2025 Match for Free: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் விளையாட உள்ளது. இப்போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் இலவசமாக, அதற்கு எந்தெந்த ரீச்சார்ஜ் திட்டங்களை தேர்வு செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பல ரீச்சார்ஜ் திட்டங்களில் Sony LIV-ல் ஒளிபரப்பாகும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை இலவசமாக பார்ப்பதற்கான பிளான்களை கொடுக்கின்றன. ரசிகர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் ரீச்சார்ஜ் திட்டங்களின் பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…
Add Zee News as a Preferred Source
ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்
ரூ. 979 திட்டம்: இந்த திட்டத்தில், சோனி லிவ் உட்பட 22-க்கும் மேற்பட்ட OTT தளங்களின் சந்தா இலவசமாக கிடைக்கிறது. இது தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டாவுடன் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ரூ. 449 திட்டம்: இது ஏர்டெல் Xstream Play பிரீமியம், அன்லிமிடெட் அழைப்புகள், மற்றும் தினமும் 4ஜிபி டேட்டாவுடன் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ரூ. 279 திட்டம்: இதில் ஏர்டெல் Xstream Play பிரீமியம், நெட்பிளிக்ஸ், Z55, மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஒரு மாதத்திற்கு 1ஜிபி டேட்டா வழங்கப்படும்.
ரூ. 181 திட்டம்: இது ஒரு டேட்டா திட்டம். இது 15ஜிபி டேட்டாவுடன் ஏர்டெல் Xstream Play பிரீமியம் சந்தா மற்றும் சோனி லிவ் உட்பட 22-க்கும் மேற்பட்ட OTT தளங்களுக்கான இலவச அணுகலை வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் ஒரு மாதம்.
ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்
ரூ. 445 திட்டம்: இந்த திட்டத்தில், தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், மற்றும் சோனி லிவ், Z5, டிஸ்கவரி+ போன்ற OTT தளங்களின் சந்தா இலவசமாக கிடைக்கிறது. இது 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ரூ. 175 திட்டம்: இது 10ஜிபி டேட்டாவுடன் 10 OTT தளங்களின் இலவச சந்தாவை வழங்குகிறது. இது ஒரு டேட்டா திட்டம் மற்றும் இதன் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள்.
ரூ. 1049 திட்டம்: இதில், தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், மற்றும் சோனி லிவ் மற்றும் Z5 போன்ற OTT தளங்களின் சந்தா இலவசமாக கிடைக்கிறது. இது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
வோடபோன் (Vi) ரீசார்ஜ் திட்டங்கள்
ரூ. 175 திட்டம்: இந்த திட்டத்தில் 10ஜிபி டேட்டா மற்றும் Z5, சோனி லிவ் போன்ற பல செயலிகளின் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள்.
ரூ. 95 திட்டம்: இது 14 நாட்களுக்கு 4ஜிபி டேட்டா மற்றும் சோனி லிவ் சந்தாவை இலவசமாக வழங்குகிறது.
ரூ. 248 திட்டம்: இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு 6ஜிபி டேட்டா, ஜியோஹாட்ஸ்டார் மற்றும் சோனி லிவ் போன்ற பல செயலிகளின் இலவச சந்தாவை வழங்குகிறது.
ரூ. 154 திட்டம்: இதில் ஒரு மாதத்திற்கு 2ஜிபி டேட்டா, Z5, சோனி லிவ் மற்றும் சன் NXT போன்ற பல செயலிகளின் இலவச சந்தா கிடைக்கும்.
About the Author
S.Karthikeyan