Jwala Gutta Breast Milk Donation: இந்தியாவின் மிகவும் பிரபலமான பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஜுவாலா கட்டாவும் ஒருவர் எனலாம். தற்போது ஜூவாலா கட்டா முக்கியமான முன்னெடுப்பு ஒன்றை எடுத்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
Jwala Gutta: ஜூவாலா கட்டாவின் பெண் குழந்தை
42 வயதான ஜூவாலா கட்டா கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலை கரம்பிடித்தார். ஜூவாலா கட்டா – விஷ்ணு விஷால் இணைக்கு நான்கு ஆண்டுகளுக்கு பின் கடந்த ஏப். 22ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதிக்கு பிறக்கும் முதல் குழந்தை இது. விஷ்ணு விஷாலுக்கு அவரது முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகன் உள்ளார், அவர் பெயர் ஆர்யன்.
Jwala Gutta: ஆமிர் கான் பெயர் வைத்தது ஏன்?
தற்போது பிறந்துள்ள பெண் குழந்தைக்கு பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ‘மிரா’ என பெயர் சூட்டினார். ஜூவாலா கட்டா குழந்தை பெற அதிக முறை முயன்றும் அது பயனளிக்காத நிலையில், ஆமிர் கான் பரிந்துரைத்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, அதன் பலனாக இந்த தம்பதி பெண் குழந்தையை பெற்றெடுத்தது. ஆமிர் கான் செய்த உதவிக்காகவே, அந்த குழந்தைக்கு அவரே பெயர் சூட்ட வேண்டும் என விஷ்ணு விஷால் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த தகவலை விஷ்ணு விஷாலே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
View this post on Instagram
Jwala Gutta: 30 லிட்டர் தாய்ப்பால் தானம்
இந்நிலையில், பெண் குழந்தையை பெற்றெடுத்த ஜூவாலா கட்டா தற்போது தனது தாய்பாலை தானம் அளிக்க முன்வந்துள்ளார். அதாவது, அரசு மருத்துவமனையில் தினமும் 600 மில்லி தாய்பாலை அவர் தானம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தாய் இன்றி ஆதரவில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு ஒரு தாயாக உதவும் வகையில் ஜூவாலா கட்டா இந்த முன்னெடுத்துள்ளதார். இதுவரை அவர் அவர் சுமார் 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தினந்தினம் பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஜூவாலா தாயாகி வருகிறார் எனலாம்.
Jwala Gutta: இதுவே முதல்முறை
ஜூவாலா கட்டா தனது குழந்தைக்கு தினம் தாய்ப்பால் கொடுத்த பின்னரே, அரசு மருத்துவமனைக்கு தானம் அளிக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற பல தாய்மார்கள் செயல்பட்டு வந்தாலும், ஒரு விளையாட்டு வீராங்கனை மற்றும் பிரபலம் ஒருவர் இந்த முன்னெடுப்பை மேற்கொள்வது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
Breast Milk Donation: தாய்ப்பால் முக்கியம்
தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு மிக அவசியமான ஒன்றாகும். குழந்தைகள் தாய்ப்பால் மூலமே ஊட்டச்சத்தை பெறுகிறார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குழந்தைகளிடம் அதிகரிக்கும். இது குழந்தைகள் அலர்ஜிகள், ஆஸ்த்மா போன்ற பிரச்னைகளில் இருந்து தள்ளியிருக்க உதவும். குழந்தைகள் உடல் பருமன் அடையாமல் தடுக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், பல பச்சிளம் குழந்தைகளை காக்கும் இந்த முன்னெடுப்பு ஜூவாலா கட்டாவின் பெரும் பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.