குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சார்லி கிர்க் கொலை குற்றவாளி கைது

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் ஆளும் குடியரசு கட்​சி​யின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான சார்லி கிர்க், அதிபர் ட்ரம்​புக்கு மிக​வும் நெருக்​க​மாக இருந்​தார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்​தலில் அவர் மிகத் தீவிர​மாக பிரச்​சா​ரம் செய்​தார்.

இந்த சூழலில் கடந்த 10-ம் தேதி அமெரிக்​கா​வின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்​ளத்​தாக்கு பல்​கலைக்​கழக வளாகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் சார்லி கிர்க் பங்​கேற்​றார். அப்​போது மர்ம நபர் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில் அவர் உயி​ரிழந்​தார்.

இதில் தொடர்​புடைய டெய்​லர் ராபின்​சன் (22), யூட்டா நகரில் நேற்று கைது செய்​யப்​பட்​டார். அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனை சேர்ந்த இவர் சுமார் 260 மைல் தொலைவு பயணம் செய்து சார்​லியை துப்​பாக்​கி​யால் சுட்டு கொலை செய்​துள்​ளார்.

டெய்​லர் ராபின்​சனின் தந்தை காவல் துறை​யில் பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர் ஆவார். தனது தந்​தை​யிடம் டெய்​லர் குற்​றத்தை ஒப்​புக் கொண்​டுள்​ளார். உடனடி​யாக அவர் காவல் துறைக்கு தகவல் தெரி​வித்​தார். இதன்​பேரில் யூட்டா நகரில் உள்ள ஒரு வீட்​டில் தங்​கி​யிருந்த டெய்​லர் ராபின்​சன் பிடிபட்​டார். எதற்​காக அவர், சார்​லியை கொலை செய்​தார் என்​பது குறித்து தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்​போது, “சார்லிகிர்க் கொலை வழக்​கில் குற்​ற​வாளியை கைது செய்​துள்​ளோம். அவருக்கு நெருக்​க​மானவர்​கள் குறித்து தீவிர வி​சா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. கொலைக்​கான காரணம் விரை​வில்​ தெரிய​வரும்​” என்​று தெரிவித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.