மான்செஸ்டர்,
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 158 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடி சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவை (4 சதம்) பில் சால்ட் சமன் செய்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் மற்றும் பில் சால்ட் ஆகியோர் தலா 4 சதங்கள் அடித்து இப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளனர். ரோகித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 5 சதங்களுடன் முதல் இடத்தில உள்ளனர்.