IND vs WI: பிசிசிஐ அறிவிக்கப்போகும் 15 வீரர்கள்… வேற லெவல் இந்திய டெஸ்ட் ஸ்குவாட் ரெடி!

IND vs WI, Team India: இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு (India vs West Indies) இடையிலான டெஸ்ட் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

IND vs WI: சில வீரர்கள் விளையாட வாய்ப்பில்லை 

ஆசிய கோப்பையில் விளையாடி வரும் சில வீரர்கள் இந்த டெஸ்ட் தொடரில் இடம்பெற மாட்டார்கள் எனலாம். குறைந்தபட்சம் முதல் போட்டியில் விளையாட மாட்டார்கள் என கூறப்படுகிறது. ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடர் செப். 28ஆம் தேதி நிறைவடையும், இந்தியாவில் அக். 2ஆம் தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

IND vs WI: கேப்டனின் தேடல்

எனவே, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில் கேப்டனாக செயல்பட மாட்டார். ரிஷப் பண்ட் இல்லாத காரணத்தால் வேறு சீனியர் வீரர்கள் கேப்டன்ஸியை பெறுவார்கள் எனலாம். விக்கெட் கீப்பர் பேட்டருக்கான தேடலும் பிசிசிஐயிடம் இருக்கும்.

IND vs WI: பௌலிங் யூனிட் 

அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் மேற்கு இந்திய தீவுகள் டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பு குறைவு. எனவே, வேகப்பந்துவீச்சு படையை முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் பார்த்துக்கொள்வார்கள். வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டி இடம்பெறுவார்.  சுழற்பந்துவீச்சில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் கவனித்துக்கொள்வார்கள். பேக்அப் ஸ்பின்னராக தனுஷ் கோட்டியான் அறிவிக்கப்படலாம்.

IND vs WI: பேட்டிங் யூனிட்டில் பெரிய மாற்றம்

ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் ஆகியோர் ஓபனிங்கில் களமிறங்குவார்கள். பேக்அப் ஓபனராக அபிமன்யூ ஈஸ்வரன் இருப்பார். மிடில் ஆர்டரில் சாய் சுதர்சன் நிச்சயம் இருப்பார். ஷ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும். கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என கேள்வி எழுகிறது. விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேல், நாராயண் ஜெகதீசன் ஆகியோர் இடம்பெறுவார்கள். 

இந்திய அணி ஸ்குவாட்

கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யூ ஈஸ்வரன், சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான், துருவ் ஜுரேல், நாராயண் ஜெகதீசன், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தனுஷ் கோட்டியான், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.