Vikatan Digital Awards: "‘பொல்லாதவன்’ படத்தின்போதே சிம்புவுடன் பேசிக்கிட்டிருந்தேன்" – வெற்றிமாறன்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்’ விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.

`Best Solo Creator – Male’, `Best Solo Creator – Female’, `Best Couple Creator’ என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (செப்டம்பர் 13) மாலை 4 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வெற்றிமாறன் - டி. ராஜேந்தர்
வெற்றிமாறன் – டி. ராஜேந்தர்

சிலம்பரசன்: `சென்டர் ஆப் அட்ராக்‌ஷன்!’ |Vikatan Digital Awards 2025| Most Celebrated Hero in Digital

இதில், ‘Most Celebrated Hero in Digital 2025’ பிரிவில் நடிகர் சிம்புவிற்கு விருது அறிவிக்கப்பட்டது. சிம்பு வெளிநாட்டு படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் டி.ராஜேந்திரன் அவர்கள் இவ்விருதினைப் பெற்றுக் கொண்டார். இயக்குநர் வெற்றிமாறன் விருதினை வழங்கி சிறப்பித்திருக்கிறார்.

இந்நிலையில் சிம்புவுடனான நட்பு குறித்துப் பேசியிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், ” ‘பொல்லதவன்’ படத்தின்போதே சிம்புவுடன் படம் பண்ணுவது பற்றி பேசிக்கிட்டிருந்தேன். சிம்பு ‘காளை’ படம் பண்ணும்போது ஜி.வி.பிரகாஷ் ஸ்டுடியோ வருவார். நான் ‘பொல்லாதவன்’ படத்திற்காக ஜிவி. ஸ்டுடியோ வருவேன்.

அப்போது நானும் சிம்புவும் ‘வடசென்னை’பற்றி நிறைய பேசியிருக்கிறோம். இப்போது அவருடன் சேர்ந்து ‘STR 49’ படம் பண்ணப்போகிறேன். அதன் கதை பற்றிய விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. அதன் பணிகள் எல்லாம் முடிந்தவுடன் அப்டேட், புரோமோ எல்லாம் விரைவில், சரியான நேரத்தில் வரும்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.