மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதனால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் வீறுநடை போட்டு வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற 18-வது ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இந்த தொடரில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு தனது ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவனை இந்திய வீரரான ராகுல் திவேட்டியா தேர்வு செய்துள்ளார்.
அந்த அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி போன்ற முன்னணி வீரர்களை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த அணியில் கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், ஆண்ட்ரே ரசல், டேவிட் வார்னர், சூர்யகுமார் யாதவ் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோரை தேர்வு செய்யாமல் ஆச்சரியமளித்துள்ளார்.
ராகுல் திவேட்டியா தேர்வு செய்த பிளேயிங் லெவன் விவரம்: ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஏபி டி வில்லியர்ஸ், எம்எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரஷித் கான், சுனில் நரைன், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா