பாலஸ்தீனம் தனி நாடாக இந்தியா ஆதரவு – ஐநாவில் நிறைவேறிய தீர்மானம்; அமெரிக்கா அதிருப்தி

பாலஸ்தீன பிரச்னையை அமைதியாக தீர்க்கவும், இரு-நாடு தீர்வை முன்னெடுக்கவும் வலியுறுத்தும் ‘நியூயார்க் அறிக்கை’ தீர்மானத்தை இந்தியா ஐ.நா பொதுச் சபையில் ஆதரித்தது.

பிரான்ஸ் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் 142 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேறியது.

அமெரிக்கா, இஸ்ரேல், அர்ஜென்டினா, ஹங்கேரி உள்ளிட்ட 10 நாடுகள் இதனை எதிர்த்துள்ளன, மேலும் 12 நாடுகள் வாக்களிக்கவில்லை.

இந்தத் தீர்மானம், ஜூலை மாதம் ஐ.நா. தலைமையகத்தில் பிரான்ஸ்-சவூதி அரேபியா இணைந்து நடத்திய மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

PC:
Reuters

இந்த அறிக்கை, காஸா போரை முடிவுக்குக் கொண்டு வரவும், பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு நியாயமான எதிர்காலத்தை உருவாக்கவும் ஒருமித்த நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது.

இஸ்ரேல் தலைமை, இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் இரு-நாடு தீர்வுக்கு உறுதியளிக்க வேண்டும் என்று அறிக்கை கோருகிறது.

மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்தவும், குடியேறிகளின் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும் வலியுறுத்துகிறது.

காஸாவில் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்திய இந்தத் தீர்மானம், பிராந்திய அமைதிக்கு இரு-நாடு தீர்வே ஒரே வழி என்பதை உறுதிப்படுத்துகிறது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.