ஆசிய கோப்பை கிரிக்கெட்: 6 லீக் ஆட்டங்கள் நிறைவு.. புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த மாதம் 9-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 6 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஒரு போட்டியில் விளையாடி விட்டன.

இதன் முடிவில் 2 பிரிவுகளின் புள்ளி பட்டியலிலும் அணிகளின் நிலை குறித்து இங்கு காணலாம்..!

ஏ பிரிவு:

இந்த பிரிவில் 2 போட்டிகளில் விளையாடி 2-லும் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. மறுபுறம் 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் 2-வது இடத்தில் உள்ளது. கடைசி 2 இடங்களில் முறையே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி அதில் தோல்வியடைந்துள்ள ஓமன் மற்றும் யுஏஇ அணிகள் உள்ளன.

ஏ பிரிவு புள்ளி பட்டியல்:-

1. இந்தியா – 4 புள்ளிகள் – +4.793

2. பாகிஸ்தான் – 2 புள்ளிகள் – +1.649

3. ஓமன் – 0 புள்ளி – -4.650

4. யுஏஇ – 0 புள்ளி – -10.483

பி பிரிவு:

பி பிரிவை பொறுத்தவரை தலா ஒரு போட்டியில் மட்டுமே ஆடி அதில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் முறையே ரன் ரேட் அடிப்படையில் முதல் 2 இடங்களில் உள்ளன. இதற்கடுத்து 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி கண்டுள்ள வங்காளதேசம் ரன்ரேட் அடிப்படையில் 3-வது இடத்தில் உள்ளது. 2 போட்டிகளில் விளையாடி 2-லும் தோல்வி கண்ட ஹாங்காங் 4-வது இடத்தில் உள்ளது.

பி பிரிவு புள்ளி பட்டியல்:

1. ஆப்கானிஸ்தான் – 2 புள்ளிகள் – +4.700

2. இலங்கை – 2 புள்ளிகள் – +2.595

3. வங்காளதேசம் – 2 புள்ளிகள் – -0.650

4. ஹாங்காங் – 0 புள்ளி – -2.889

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.