சென்னை: பி.எட்., எம்.எட் போன்ற தொழிற்பிரிவு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி 20.6.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26-ம் ஆண்டிற்கான பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. அரசு மற்றும் […]
