ஆசியக் கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடக்க இரண்டு போட்டிகளிலும் அசத்தல் வெற்றிகளை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னதாகவே தகுதி பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த இரண்டாம் லீக் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Add Zee News as a Preferred Source
ஆனால் அதுவும் ஒரு முக்கிய சர்ச்சையை உருவாக்கியது. பாகிஸ்தான் அணிக்கு இந்திய வீரர்கள் கை கொடுக்காமல் புறக்கணித்துவிட்டனர். சுமார் சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் சார்பில் நடந்த தாக்குதலில் 26 இந்தியர்கள் உயிரிழந்தனர். அதற்கு பிறகு இந்திய அரசு கடுமையான ராணுவ நடவடிக்கை எடுத்து பதிலடி வழங்கியது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணியை இந்திய அணியினர் தோற்கடித்து கைக் கொடுக்காமல் புறக்கணித்தனர்.
இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கைக்கொடுக்காமல் போனதை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் யூசுப் யுகானா, சூர்யகுமார் யாதவ்-வை சுவர்யகுமார் யாதவ் என கூறி கடுமையாக விமர்சித்து உள்ளார். பாகிஸ்தான் என்எச்ச்டி தொலைக்காட்சியில் நடைபெற்ற உரையாடலில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூசூப் யுகானா சூரியகுமார் யாதவிற்கு “பன்றிகுமார்” என புனைபெயர் வைத்து கடுமையாக விமர்சித்தார்.
ஹிந்தி மொழியில் “சுவர்” என்ற சொல்லுக்கு பன்றி என்ற பொருள் இருப்பதாக அவர் விளக்கி, சூரியகுமாருக்கு பதிலாக “சுவர்யகுமார்” என்று சொல்வது என்றார். மேலும், இந்திய அணி விளையாடும் முறை அம்பயர்களுடன் கூட்டு செய்வதாகவும், குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி போட்டிகளில் வெல்ல முயற்சிக்கிறது என்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
உரையாடல் சில வரிகள்:
யூசூப்: “மாயை கோட்டையிலிருந்து இந்தியா தப்ப முடியாது. அவர்களுடைய கேப்டன் சுவர்யகுமார்…”
தொகுப்பாளர்: “அது சூரியகுமார் யாதவ்”
யூசூப்: “ஆம், அதையே நானும் சொன்னேன். அவர் தான் சுவர்யகுமார்.”
தொகுப்பாளர்: “இல்லை, அவர் சூரியகுமார் யாதவ்.”
யூசூப்: “ஓ, சரி. அவர் தான் சுவர்யகுமார். இந்தியா வெட்கப்பட வேண்டும், ஏனெனில் அம்பயர்களை கூட்டமாக வைத்துக்கொண்டு அவர்களை சித்திரவதை செய்கிறது. அனைத்திற்கும் ஓர் எல்லை இருக்கிறது.”
About the Author
R Balaji