ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியன் இந்தியா சூரியகுமார் யாதவ் தலைமையிலான அணியாக பிரமிப்பான வெற்றிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஐசிசி டி20 தரவரிசையில் முன்னணியில் இருக்கும் இந்தியா, தங்களது திறமையான வீரர்களால் எதிரணிகளை களையடித்து கோப்பையை மீண்டும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
இக்கோப்பையின் முதல் போட்டியில் இந்தியா அமீரக அணியை 4.5 ஓவரில் 57 ரன்னில் சுருட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தால் வென்றது. அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா, குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. இதன் காரணமாக ரன்ரேட் அடிப்படையில், இந்தியா கடைசிப் போட்டிக்கு முன்னதாகவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை 15 ஓவருக்கு மேலாக கவனிக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “இந்திய அணியை எந்த ஆசிய அணியும் வீழ்த்த முடியாது. பாகிஸ்தான் எங்கள் அணிக்கு பொருத்தமல்ல என்றே நான் சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் அந்த அணியின் தரம் பாதிக்கபட்டுள்ளது.
இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமலும், அணி மிக சிறப்பாகவே முன்னேறி வருகிறது. பாகிஸ்தானுக்கு போதும்தான் நாம் தோற்றுவோம் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பெரும்பாலான போட்டிகளில் இந்தியா சிறந்த அணியாக விளங்குகிறது.
15 ஓவர்க்குப் பிறகு நான் போட்டியை பார்த்ததை நிறுத்தி மற்ற போட்டிகளைத் பார்த்தேன். பாகிஸ்தான் அணியுடன் இந்தியா போட்டிகள் மிஸ்ஸாகி வருகின்றன. வாசிம் அக்ரம், வகார் யூனிஸ், சயீத் அன்வர், ஜாவேத் மியான்தத் போன்ற வீரர்கள் இருந்த சமயத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மிகப்பெரும் போட்டிகள் ஆனதாக நினைக்கிறேன்.
இப்போதைய காலத்தில் பாகிஸ்தான் அணி போட்டி தரவில்லை. எனவே, நான் இந்தியா-ஆஸ்திரேலியா, இந்தியா-தென்னாப்பிரிக்கா போன்ற முக்கிய போட்டிகளை மட்டுமே பார்க்க விரும்புகிறேன். மற்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளும் முக்கியமாக உள்ளன என அவர் கூறினார்.
About the Author
R Balaji