புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி (வயது 19) கடந்த சனிக்கிழமை மதியம் தனது காதலனுடன் பாலிஹர்சந்தி கடற்கரை அருகே உள்ள வனப்பகுதியில் தனிமையில் இருந்தார். அப்போது, அந்த வனப்பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர் மறைந்திருந்து காதல் ஜோடியை தங்கள் செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுத்தனர்.
இதை கண்ட கல்லூரி மாணவியின் காதலன் அந்த இளைஞர்களிடன் செல்போனில் எடுத்த வீடியோ, புகைப்படத்தை டெலிட் செய்யும்படி கேட்டுள்ளார். ஆனால், டெலிட் செய்யவேண்டுமானால் பணம் தரவேண்டுமென அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இதற்கு காதல் ஜோடி மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கல்லூரி மாணவியின் காதலனை சரமாரியாக தாக்கியது.
பின்னர், அந்த வனப்பகுதியில் வைத்து கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி நேற்று மாலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள எஞ்சிய ஒருநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.