ஷென்சென்,
மொத்தம் ரூ.11 கோடி பரிசுத் தொகைக்கான சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் இன்று தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது. இன்று முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரரான லக்சயா சென், சீனாவின் லி ஷிபெங் உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 21-14 என்ற புள்ளிக்கணக்கில் லக்சயா சென் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற 2வது மற்றும் 3வது செட்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லி ஷிபெங் 24-22, 21-11 என்ற செட் கணக்கில் லக்சயா சென்னை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அதிர்ச்சி தோல்வி கண்ட லக்சயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.