130கிமீ ரேஞ்ச் வழங்கும் ஹோண்டா WN7 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை WN7 என்ற பெயருடன் சிறந்த பெர்ஃபாமென்ஸ் வழங்கும் வகையிலான மாடலாகவும், அதிகபட்ச டார்க் வெளிப்படுத்துவதாகவும் விளங்க உள்ளது.

WN7 என்ற பெயர் “Be the Wind” என்ற மேம்பாட்டு கான்செப்ட்டிற்கான “W” என்பதிலிருந்தும், “N” என்பது “Naked” பிரிவு என்பதற்கும், 7 என்பது பவர் வெளியீடு வகுப்பைக் குறிக்கும் என கூறப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட EV Fun Concept அடிப்படையிலான உற்பத்தி நிலை மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ள டபிள்யூஎன்7 பைக்கில் உள்ள பேட்டரி ஃபிக்ஸ்டூ முறையில் லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் பவர் மற்றும் டார்க் விபரங்களை தெளிவுப்படுத்தவில்லை என்றாலும், ஹோண்டா பெர்ஃபாமென்ஸ் தொடர்பாக கூறுகையில், 600cc ICE மாடல்களுக்கும் இணையாகவும், டார்க் 1000cc ICE மாடல்களுக்கும் போட்டியாக இருக்கும் என குறிப்பிடுகின்றது.

CCS2 சார்ஜர் ஆதரவினை பெற்றி 30 நிமிடங்களில் 20% முதல் 80% வரை வேகமாக சார்ஜ் ஏறும், வீட்டு சார்ஜிங் மூலம் 3 மணி நேரத்திற்குள் முழு சார்ஜையும் எட்டும் என தெரிவிக்கப்படுள்ளது.

முன்புறத்தில் இரட்டை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு அப்சைடு டவுன் ஃபோர்க்குடன் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.

5 அங்குல TFT கிளஸ்ட்டரை பெற்றுள்ள இந்த WN7 முழு விவரக்குறிப்பு நவம்பரில் நடைபெற உள்ள EICMA 2025ல் வெளியிடப்பட உள்ள நிலையில் உற்பத்திக்கு 2025 இறுதி அல்லது 2026ல் தயாரிக்கப்பட்டு ஐரோப்பா சந்தையில் கிடைக்க உள்ளது.

Related Motor News

No Content Available

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.