Asia Cup 2025, Points Table Update: ஆசிய கோப்பை 2025 தொடர் கடந்த செப். 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.
Add Zee News as a Preferred Source
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட அணிகளும்; பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் உள்ளிட்ட அணிகளும் இடம்பெற்றுள்ளன.
Asia Cup 2025: செப். 19இல் நிறைவு
தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அணிகளும் தங்கள் குரூப்பில் உள்ள 3 அணிகளுடன் தலா 1 முறை மோத உள்ளன. குரூப் சுற்று வரும் வெள்ளிக்கிழமையுடன் (செப். 19) நிறைவடைகிறது. அன்று புள்ளிப்பட்டியலில் இருப்பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களையும் பிடிக்கும் 4 அணிகளும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 4 சுற்று செப்.20ஆம் தேதி தொடங்கும். அதிலும் ஒவ்வொரு அணியும் மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். சூப்பர் 4 சுற்று முடிவில் அதன் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குச் செல்லும். செப். 28ஆம் தேதி இறுதிப்போட்டி துபாயில் நடைபெற உள்ளன.
Asia Cup 2025: ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி தோல்வி
ஆசிய கோப்பை 2025 போட்டிகள் பெரிதும் சுவாரஸ்யமின்றி நடைபெற்று வந்தன. இந்தியா – பாகிஸ்தான் போட்டியே பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி நடந்து முடிந்தது. அப்படியிருக்க, வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் மோதிய நேற்றைய (செப். 16) போட்டி மட்டுமே பரபரப்பாக நடைபெற்றது எனலாம். ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், பி பிரிவில் எந்த அணி தகுதிபெறும் என இன்னும் உறுதியாகவில்லை. இலங்கை மட்டும் தற்போது அடுத்த சுற்றுக்கு செல்வது உறுதியாகி உள்ளது.
Asia Cup 2025: பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம்
ஏ பிரிவில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இன்று நடைபெறும் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் போட்டியில் வெற்றி பெறும் அணியே அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். ஒருவேளை இன்று ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்றால் பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும், அவர்கள் முதல் சுற்றோடு வெளியேற நேரிடும். இன்றைய போட்டியில் வெற்றியடையும் அணிதான் வரும் ஞாயிறு அன்று சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியுடன் மோதும்.
Asia Cup 2025: ஏ பிரிவு புள்ளிப்பட்டியல்
பி பிரிவில் வங்கதேசம் மற்றும் ஹாங் காங் அணிகள் மட்டும் மொத்தம் 3 போட்டிகளையும் விளையாடிவிட்டன மற்ற 6 அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி உள்ளது. புள்ளிப்பட்டியலை பொருத்தவரை, ஏ பிரிவில் இந்திய அணி (+4.793) 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் (+1.649), ஐக்கிய அரபு அமீரகம் (-2.030) தலா 2 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. ஓமன் 2 போட்டிகளிலும் தோற்று தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.
Asia Cup 2025: பி பிரிவு புள்ளிப்பட்டியல்
பி பிரிவில் இலங்கை (+1.546), வங்கேதசம் (-0.270) ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்று முறையே முதலிரண்டு இடங்களில் உள்ளன. ஆப்கானிஸ்தான் (+2.150) 2 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. 3 போட்டிகளிலும் தோற்று ஹாங் காங் வெளியேறிவிட்டது.