புதுடெல்லி,
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரில் இருந்து இந்திய முன்னணி வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக தேஜல் ஹசாப்னிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related Tags :