போபால்,
பிரதமர் மோடி இன்று மத்தியபிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அம்மாநிலத்தின் தார் மாவட்டத்தில் பிரதமர் மந்திரியின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைகள் பூங்கா அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நமது சகோதரிகள், மகள்களின் கும்குமத்தை அவமதித்தனர். நாம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாத முகாம்களை அழித்தனர். நமது பாதுகாப்புப்படை வீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிடவைத்தனர். ஆபரேஷன் சிந்தூரின்போது தனக்கு நடந்த துயரத்தை பாகிஸ்தானிய பயங்கரவாதி அழுதுகொண்டே கூறுவதை உலகம் நேற்று கண்டது. இதுதான் புதிய இந்தியா. அணுஆயுத மிரட்டலுக்கு புதிய இந்தியா அஞ்சாது. எதிரிகளின் வீடுகளுக்கே சென்று இந்தியா தாக்குதல் நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.