திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. செப்டம்பர் 17 இன்று திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவரும், மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி போராளியுமான தந்தை பெரியாரின் பிறந்தநாள். பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது நினைவைப் போற்றி வருகின்றனர். முன்னதாக பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்தவகையில் சுயமரியாதை, ஆளுமை திறன், பகுத்தறிவு பார்வை கொண்டதாக செயல்பாடுகள் அமையும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. திருச்சி ஆட்சியர் […]
